தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Melavalavu Murders Petitions Against The Release Of Those Arrested In The Case Are Dismissed

Melavalavu Murders: மேலவளவு படுகொலை: 13 பேர் விடுதலையை எதிர்த்த மனு தள்ளுபடி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Feb 03, 2023 11:39 AM IST

‘13 பேரின் முன் கூட்டிய விடுதலை குறித்த அரசாணையை பிறப்பிப்பதற்கு முன் அனைத்து தரப்பு, சூழலையும் பரிசீலனை செய்த பிறகே, தமிழக அரசு அரசாணையை பிறப்பித்து உள்ளது. எனவே இதில் தலையிட விரும்ப வில்லை’ -ஐகோர்ட்

மேலவளவில் படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவாலயம்.
மேலவளவில் படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவாலயம்.

ட்ரெண்டிங் செய்திகள்

13 பேரின் முன் கூட்டிய விடுதலை குறித்த அரசாணையை பிறப்பிப்பதற்கு முன் அனைத்து தரப்பு, சூழலையும் பரிசீலனை செய்த பிறகே, தமிழக அரசு அரசாணையை பிறப்பித்து உள்ளது. எனவே இதில் தலையிட விரும்ப வில்லை என கூறி மனுக்களை தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

மதுரை மாவட்டம், மேலவளவு ஊராட்சி தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராமர், சின்ன ஒடுங்கன், செல்வம், மனோகரன், மணிகண்டன், அழகு, சொக்கநாதன், சேகர், பொன்னையா, ராஜேந்திரன், ரெங்கநாதன், சக்கரைமூர்த்தி, ஆண்டிச்சாமி ஆகிய 13 பேர் பொது மன்னிப்பு அடிப்படையில் கடந்த 2019 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்களின் விடுதலையை எதிர்த்து வக்கீல் ரத்தினம், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இதேபோல் கொலையானவர்களின் மனைவி மற்றும் தாய் தரப்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வு , அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து இருந்தனர்.

இன்று அது தொடர்பான தீர்ப்பு வழங்கினர், அதில், 13 பேரின் முன் கூட்டிய விடுதலை குறித்த அரசாணையை பிறப்பிப்பதற்கு முன் அனைத்து தரப்பு, சூழலையும் பரிசீலனை செய்த பிறகே, தமிழக அரசு அரசாணையை பிறப்பித்து உள்ளது. எனவே இதில் தலையிட விரும்ப வில்லை என கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்