‘மனநிறைவாக பணியாற்றினேன்.. அரசியலை எதிர்ப்பேன்..’ அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட மனோ தங்கராஜ் பரபரப்பு பதிவு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘மனநிறைவாக பணியாற்றினேன்.. அரசியலை எதிர்ப்பேன்..’ அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட மனோ தங்கராஜ் பரபரப்பு பதிவு!

‘மனநிறைவாக பணியாற்றினேன்.. அரசியலை எதிர்ப்பேன்..’ அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட மனோ தங்கராஜ் பரபரப்பு பதிவு!

HT Tamil HT Tamil
Sep 29, 2024 12:17 PM IST

Mano Thangaraj: ‘கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத சக்திகளின் பிரிவினை அரசியலை முறியடித்து மக்களை ஒன்றுபடுத்தி மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் சென்றுள்ளேன். இப்பணிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி’

‘மனநிறைவாக பணியாற்றினேன்..  அரசியலை எதிர்ப்பேன்..’ அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட மனோ தங்கராஜ் பரபரப்பு பதிவு!
‘மனநிறைவாக பணியாற்றினேன்.. அரசியலை எதிர்ப்பேன்..’ அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட மனோ தங்கராஜ் பரபரப்பு பதிவு!

‘அமைச்சராக சிறப்பாக செயல்பட்டேன்’

‘‘2021 - தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 9.5% என்றிருந்தது ஒரே ஆண்டில் 2022-ல் 16.4% மாகவும், 2023-ல் 25% மாகவும் உயர்ந்தது.

2023-ல் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது ஆவின் பால் கொள்முதல் நாளொன்றிற்கு 26 லட்சம் லிட்டராக இருந்தது. 2024-ல் ஆவின் வரலாற்றில் முதன் முறையாக 38 லட்சம் லிட்டராக உயர்ந்தது. விவசாய பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு உரிய விலை கிடைப்பதையும், 10 நாட்களுக்கு ஒரு முறை பால் பணம் பட்டுவாடா செய்வதையும், பொதுமக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியதும் மன நிறைவு தருகிறது.

மதவாத அரசியலை தொடர்ந்து எதிர்ப்பேன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத சக்திகளின் பிரிவினை அரசியலை முறியடித்து மக்களை ஒன்றுபடுத்தி மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் சென்றுள்ளேன். இப்பணிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி! மதவாத பாசிச அரசியலை எதிர்த்து, ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும்,’’

என்று, அந்த பதிவில், அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவு செய்துள்ளார்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.