தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Manipur Violence: மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைப்பு!

Manipur Violence: மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைப்பு!

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 26, 2023 11:43 AM IST

மக்களவையை நண்பகல் 12 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் ((PTI))

ட்ரெண்டிங் செய்திகள்

முன்னதாக மத்திய அரசுக்கு எதிராக இரண்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் மக்களவை சபாநாயகரிடம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணி சார்பாக காங்கிரஸ் எம்.பியும் மக்களவை துணை தலைவருமான கவுரவ் கோகாய் ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளர்.

மேலும் பி.ஆர்.எஸ் கட்சி சார்பில் நமா நாகேஸ்வராவும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.

மணிப்பூர் பழங்குடி பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச்செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தியா கூட்டணி சார்பில் நம்பிக்கை இல்ல தீர்மான சபாநாயகரிடம் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் தெலுங்கானா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தெலுங்கான மாநிலத்தை தாழ்மை படுத்தும் வகையில் இந்த மத்திய அரசு செயல் பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மத்திய அரசு மீது பி.ஆர்எஸ் கட்சி சார்பில் நம்பிப்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் வழங்கப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல், கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட சுமார் எம்.பிக்கள் கையெழுத்திட்டு தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. திமுக இந்த தீர்மானத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்