Deputy CM: உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி அறிவிப்பு! 3 பேர் இலாகாக்கள் பறிப்பு! அமைச்சர் ஆகிறார் செந்தில் பாலாஜி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Deputy Cm: உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி அறிவிப்பு! 3 பேர் இலாகாக்கள் பறிப்பு! அமைச்சர் ஆகிறார் செந்தில் பாலாஜி!

Deputy CM: உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி அறிவிப்பு! 3 பேர் இலாகாக்கள் பறிப்பு! அமைச்சர் ஆகிறார் செந்தில் பாலாஜி!

Kathiravan V HT Tamil
Sep 28, 2024 10:28 PM IST

புதியதாக பொறுப்பு ஏற்க உள்ள 4 அமைச்சர்களுக்கு நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி அறிவிப்பு! 3 மந்திரிகள் இலாகாக்கள் பறிப்பு! பொன்முடி இலாகா மாற்றம்!
உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி அறிவிப்பு! 3 மந்திரிகள் இலாகாக்கள் பறிப்பு! பொன்முடி இலாகா மாற்றம்!

துணை முதலமைச்சர் ஆனார் உதயநிதி

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தற்போதுள்ள இலாகாக்களுடன் கூடுதலாக திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத்துறையை ஒதுக்கவும், துணை முதலமைச்சர் ஆக அறிவிக்கவும் ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்து உள்ளார். 

மேலும் அமைச்சரவையில் வி.செந்தில்பாலாஜி, டாக்டர் கோவி. செழியன், பனைமரத்துப்பட்டி ஆர்.ராஜேந்திரன், எஸ்.எம்.நாசர் ஆகியோரை சேர்க்கவும் முதலமைச்சர் அளித்தை பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான், சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கே.ராமச்சந்திரன் ஆகியோரின் பொறுப்பகளை திரும்ப பெறவும் முதலமைச்சர் பரிந்துரை செய்த நிலையில் அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பு தெரிவித்து உள்ளார். 

அமைச்சரவை மாற்றம் குறித்த விவரங்கள் 

உயர்கல்வித்துறை அமைச்சர் ஆக இருந்த பொன்முடிக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

சுற்றுலா துறை அமைச்சர் ஆக இருந்த மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜுக்கு மனித வள மேம்பாடு மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது .

வனத்துறையை கவனித்து வந்த டாக்டர் எம்.மதிவேந்தனுக்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை கவனித்து வந்த ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு பால்வளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறையை கவனித்து வந்த தங்கம் தென்னரசுவுக்கு சுற்றுசூழல் மாசுக்காட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

செந்தில் பாலாஜிக்கு என்ன பொறுப்பு?

புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டு உள்ள செந்தில் பாலாஜிக்கு ஏற்கெனவே வகித்து வந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை ஒதுக்கீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித்துறை திருவிடைமருதூர் தொகுதி எம்.எல்.ஏவும், கொறடாவுமான கோவி.செழியனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. 

நாளை பதவி ஏற்பு 

புதியதாக பொறுப்பு ஏற்க உள்ள 4 அமைச்சர்களுக்கு நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.