’சொத்து குவிப்பு வழக்கு! ’2 அமைச்சர்களை விடுவித்தது செல்லாது!’ நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி தீர்ப்பு!-madras high courts verdict upheld minister thangam tennarasu and kkssr ramachandrans acquittal in asset hoarding case - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’சொத்து குவிப்பு வழக்கு! ’2 அமைச்சர்களை விடுவித்தது செல்லாது!’ நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி தீர்ப்பு!

’சொத்து குவிப்பு வழக்கு! ’2 அமைச்சர்களை விடுவித்தது செல்லாது!’ நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி தீர்ப்பு!

Kathiravan V HT Tamil
Aug 07, 2024 11:21 AM IST

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்த உத்தரவை ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு உள்ளார்.

’சொத்து குவிப்பு வழக்கு! ’2 அமைச்சர்களை விடுவித்தது செல்லாது!’ நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு!
’சொத்து குவிப்பு வழக்கு! ’2 அமைச்சர்களை விடுவித்தது செல்லாது!’ நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு!

வரும் செப்டம்பர் 11ஆம் தேதி  விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ள நீதிபதி, தினசரி அடிப்படையில் விசாரித்து சொத்து குவிப்பு வழக்கு விசாரணை முடிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார். 

அமைச்சர் தங்கம் தென்னரசு 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் நிதி, மனிதவள மேலாண்மை, மின்சாரம் ஆகிய துறைகளின் அமைச்சராக உள்ளவர் தங்கம் தென்னரசு. இவர் கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை நடைபெற்ற மறைந்த முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையிலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து இருந்தார். 

2006 மே மாதம் 15ஆம் தேதி தொடங்கி 2010 மார்ச் 31ஆம் தேதி வரையிலான காலத்தில் ரூபாய் 76.40 லட்சம் ரூபாய் அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக தங்கம் தென்னரசு மீது 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதில் தங்கம் தென்னரசுவின் மனைவி மணிமேகலை உள்ளிட்டோரின் பெயரும் இடம்பெற்று இருந்தது. 

அதிமுக ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி தங்கம் தென்னரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் இருந்து தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோரை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது. 

இந்த நிலையில் மாவட்டமுதன்மை அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தாமாக முன் வந்து மேல்முறையீடு செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கை மறு ஆய்வு செய்தார். 

வழக்கு விசாரணை பற்றி பதில் அளிக்க தங்கம் தென்னரசு உள்ளிட்டோருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணைக்கு எதிராக தங்கம் தென்னரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் வழக்கின் மறுவிசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்றது.  

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் 

இதே போல் கடந்த 2006 - 11 திமுக ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ள்ட்டோருக்கு எதிராக கடந்த 2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் இருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். 

ஆனால் இந்த தீர்ப்புக்கு எதிராக தாமாக முன் வந்து மறு ஆய்வு செய்வதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தார். இந்த முடிவுக்கு எதிராக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தரப்பில் உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், விசாரணைக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவிஹ்ட்து விட்டது. இதனால் இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. 

விடுதலை செய்தது செல்லாது என எதீர்ப்பு 

இன்று காலை 10.30 மணிக்கு 2 வழக்குகள் மீதான தீர்ப்பை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தார். விசாரணை நீதிமன்றங்கள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்தது செல்லாது என்று அறிவித்தததுடன், வரும் செப்டம்பர் 11ஆம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ள நீதிபதி, தினசரி அடிப்படையில் விசாரித்து சொத்து குவிப்பு வழக்கு விசாரணை முடிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார். 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.