Railway: ’ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவது தாமதமாகிறதா!’ வருவாய் துறை அமைச்சர் KKSSR. ராமச்சந்திரன் பதிலடி
தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் இரயில்வே திட்டங்களுக்கு மொத்தமாக 2443 ஹெக்டேர் நிலங்களை நில எடுப்பு செய்ய ஏற்கனவே தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் இரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளில் எவ்வித காலதாமதமும் இல்லை என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறி உள்ளார்.
தனிக்கவனம் செலுத்தி வருகின்றோம்
இது தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஒன்றிய அரசினால் செயல்படுத்தப்பட்டு வரும் இரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்களை நில எடுப்பு செய்வதில் மாநில அரசு காலதாமதம் செய்து வருவதாக ஒன்றிய இரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் தெரிவித்துள்ளதாக சில நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது தொடர்பாக கீழ்கண்ட விபரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 2021- மே மாதம் முதல் தமிழகத்தில் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட இரயில்வே திட்டங்களின் முக்கியத்துவத்தை நன்குணர்ந்து பல ஆண்டுகளாக நிலுவையிலிருந்த இரயில்வே திட்டங்களுக்கான நில எடுப்பு பணிகளின் மீது தனிகவனம் செலுத்தி விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.