தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Election Results 2024: நாளை வாக்கு எண்ணிக்கை! ஏற்பாடுகள் தீவிரம்! வஜ்ரா வாகனங்கள் ரெடி! ஒரு லட்சம் போலீஸ் பாதுகாப்பு!

Election Results 2024: நாளை வாக்கு எண்ணிக்கை! ஏற்பாடுகள் தீவிரம்! வஜ்ரா வாகனங்கள் ரெடி! ஒரு லட்சம் போலீஸ் பாதுகாப்பு!

Kathiravan V HT Tamil
Jun 03, 2024 07:21 AM IST

Lok Sabha Elections 2024: நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், இன்று நண்பகலில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகு தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்திப்பது இதுவே முதல் முறை

Election Results 2024: நாளை வாக்கு எண்ணிக்கை! ஏற்பாடுகள் தீவிரம்! வஜ்ரா வாகனங்கள் ரெடி! ஒரு லட்சம் போலீஸ் பாதுகாப்பு!
Election Results 2024: நாளை வாக்கு எண்ணிக்கை! ஏற்பாடுகள் தீவிரம்! வஜ்ரா வாகனங்கள் ரெடி! ஒரு லட்சம் போலீஸ் பாதுகாப்பு!

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் 

இதில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. 

இதில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியிலும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டது. மொத்தம் 950 வேட்பாளர்கள் களம் கண்டனர். 

பாதுகாப்பு பணிகளில் ஒரு லட்சம் காவலர்கள் 

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நாளைய தினம் எண்ணப்படுகின்றன.  வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணிகளுக்காக 44ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

இதுமட்டுமின்றி கட்சி அலுவலகங்கள், முக்கிய பிரமூகர்கள் இல்லங்கள், பொதுமக்கள் கூடும் இடங்களில் என மொத்தமாக சுமார் ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். 

வாக்கு எண்ணும் மையங்களில் அசம்பாவிதங்களை தடுக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபவார்கள் என்றும், கலவரங்கள் ஏற்பட்டால் தடுக்க வஜ்ரா மற்றும் வருண் வாகனங்களை வாக்கு எண்ணும் மையங்களில் தயார் நிலையில் வைக்கவும் காவல்துறை திட்டமிட்டு உள்ளது. 

வாக்கு எண்ணும் பணிகளில் 38 ஆயிரம் பேர்

வாக்கு எண்ணும் பணிகளில் மட்டும் 38 ஆயிரத்து 500 பேர் ஈடுபட உள்ளனர். இதில் வாக்கு எண்ணும் பணியில் 10 ஆயிரம் பேரும், மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து வைக்கும் பணியில் 24 ஆயிரம் பேரும், நுண் பார்வையாளர்களாக 4 ஆயிரத்து 500 பேரும் ஈடுபடுகின்றனர். 

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் 39 வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள 43 கட்டடங்களில் வைக்கப்பட்டு உள்ளது. 

இந்த மையங்களில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு அறை வீதம் 234 அறைகளில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அறையிலும் 14 மேசைகள் வீதம் சுமார் 3 ஆயிரத்து 300 மேசைகளில் இந்த வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும், சில இடங்களில் 14க்கும் கூடுதலான மேசைகள் பயன்படுத்தப்படும். 

காலை 8 மணிக்கு தொடக்கம் 

வாக்கு எண்ணிக்கையானது நாளை காலை 8 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் தொடங்க உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஒவ்வொரு மேசையிலும் கேமரா பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை கண்காணிக்கப்படும். 

ஒவ்வொரு தொகுதிக்கும் நியமனம் செய்யப்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் (ஐ.ஏ.எஸ்) முன்னிலையில் இந்த வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும். ஒவ்வொரு சுற்று முடிவிலும் சுற்று வாரியாக எண்ணப்பட்ட வாக்குகள் அறிவிக்கப்படும். 

சென்னையை பொறுத்தவரை தென் சென்னை தொகுதியில் 41 வேட்பாளர்களும், மத்திய சென்னை தொகுதியில் 31 வேட்பாளர்களும், வட சென்னை தொகுதியில் 35 வேட்பாளர்களும், திருவள்ளூர் தொகுதியில் 14 வேட்பாளர்களும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 31 வேட்பாளர்களும், காஞ்சிபுரம் தொகுதியில் 11 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். 

தேர்தல் ஆணையம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு 

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், இன்று நண்பகலில் தேர்தல் ஆணையம் சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகு தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர்களை சந்திப்பது இதுவே முதல் முறை ஆகும், 

இந்த செய்தியாளர் சந்திப்பில், வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் ஆணையம் செய்துள்ள ஏற்பாடுகள் மற்றும் எதிர்க்கட்சிகள் வைத்துள்ள விமர்சனங்கள் குறித்து தேர்தல் ஆணையர் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டி20 உலகக் கோப்பை 2024