Lok Sabha Election 2024: ‘12 மாநிலங்களில், ஆண்களை விட பெண் வாக்காளர்களின் விகிதம் அதிகம்’-இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்
Lok Sabha Election 2024: 12 மாநிலங்களில், ஆண்களை விட பெண் வாக்காளர்களின் விகிதம் அதிகமாக உள்ளது என இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். 100 வயதை கடந்த 2.18 லட்சம் பேர் மக்களவை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 1.8 கோடி முதல்முறை வாக்காளர்கள், மக்களவை தேர்தலில் பங்கேற்க உள்ளனர்.

மக்களவைத் தேர்தல் 2024 தேதிகளை சனிக்கிழமை அறிவிக்கவுள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், இந்த ஆண்டு, 1.89 கோடி முதல் முறை வாக்காளர்கள் இருப்பார்கள் என்றும், அவர்களில் 85 லட்சம் பேர் பெண்களாக இருப்பார்கள் என்றும் கூறினார்.
12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், ஆண்களை விட பெண் வாக்காளர்களின் விகிதம் அதிகமாக உள்ளது என்றும் அவர் கூறினார். இந்த தேர்தலில் மொத்தம் 96.8 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49.7 கோடி ஆண்கள், 47.1 கோடி பெண்கள் மற்றும் 48,000 திருநங்கைகள் ஆவர். ஒட்டுமொத்த உலகுக்கே இது தேர்தல் ஆண்டு. ஒட்டுமொத்தமாக 97 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் 68,144 வாக்குச்சாவடிகள் உள்ளன.
தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டில் முதல் முறை வாக்காளர்கள்5.26 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி, பெண் வாக்காளர்கள் 47.1 கோடி, மூன்றாம் பாலினம் 48,044 பேர் உள்ளனர். ஒட்டுமொத்த உலகிற்கே இது தேர்தல் ஆண்டு. 2024-ல் மட்டும் 60 நாடுகளில் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலை விட தற்போதைய தேர்தலில் வாக்காளர்கள் 6% அதிகம் ஆகும். நாடு முழுவதும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். மக்களவை தேர்தலுக்காக நாடு முழுவதும் 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 1.50 கோடி தேர்தல் பணியாளர்கள் இந்தியா முழுவதும் பணியாற்ற உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்காக 55 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
