Lok Sabha Election 2024: ’காஷ்மீரில் என்ன நடக்கிறது! அனந்த்நாக்-ரஜோரி தேர்தலை ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்!’
“தேர்தல் தேதியை மே 7 முதல் மே 25 வரை திருத்த ஆணையம் முடிவு செய்துள்ளது என்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது”

அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக வாக்குப்பதிவை ஒத்திவைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது,
மோசமான வானிலை காரணமாக ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவை மே 25ஆம் தேதிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒத்திவைத்து உள்ளது.
முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி, பிரபல மதத் தலைவர் மியான் அல்தாஃப் உட்பட 20 வேட்பாளர்கள் போட்டியிடும் அனந்த்நாக்-ரஜோரி மக்களவைத் தொகுதியில் வரும் மே மாதம் 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருந்தது.
தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு பல்வேறு தளவாடங்கள், தகவல் தொடர்பு மற்றும் இணைப்பின் இயற்கையான தடைகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொள்காட்டி உள்ளனர்.