தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mdmk: ’திருப்பூர் துரைசாமியை நீக்குக’ வைகோவுக்கு செஞ்சி ஏ.கே.மணி கடிதம்

MDMK: ’திருப்பூர் துரைசாமியை நீக்குக’ வைகோவுக்கு செஞ்சி ஏ.கே.மணி கடிதம்

Kathiravan V HT Tamil
May 02, 2023 12:56 PM IST

"அவைத் தலைவர் பொறுப்பில் நீடிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டார் என்பதால், அவரை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்" ஏ.கே.மணி கடிதம்

மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

ட்ரெண்டிங் செய்திகள்

முன்னதாக மதிமுகவின் தலைமை நிலைய செயலாளராக துரை வைகோ நியமிக்கப்பட்டதை கண்டித்து அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தொடர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில் மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிட வேண்டும் என்று வைகோவுக்கு திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதி இருந்தார்.

<p>ம.தி.மு.க. தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ</p>
ம.தி.மு.க. தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ

அதில் 09/03/2022 மற்றும் 28/06/2022 ஆம் தேதிகளில் நடைபெற்ற உயர்நிலைக்குழு மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டங்களில் நான் கலந்து கொண்ட காரணத்தாலும் தாங்கள் என்னை பற்றி விமர்சித்து பேசினால் நான் உடனடியாக தக்க ஆதாரங்களுடன் தடந்த உண்மைகளையும் என்னுடைய கருத்துக்களையும் கழகத்தின் நலன் கருதி எப்போதும் போல் வெளிப்படையாக தெரியப்படுத்தி இருப்பேன் என்பதாலும் தலைமைக்கழக நிர்வாகிகள் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மத்தியில் தங்களை பற்றிய நிலைபாடு தெரிந்துவிடும் என்ற காரணத்தாலும் நான் எழுதிய கடிதத்தை பற்றி தாங்கள் எதுவும் பேச முன்வரவில்லை. 

13/11/2022 ஆம் தேதி காணொளி காட்சி மூலம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கழக அவைத்தலைவர் உங்களுக்கும், கழக முன்னோடிகளுக்கும் அனுப்பிய கடிதங்களுக்கு தலைமைக் கழக நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிடவில்லை என்னும் உங்கள் ஆதங்கத்தை அக்கூட்டத்தில் வருத்தப்பட்டு பேசியுள்ளீர்கள்.

நான் கழகத்தின் நலன் கருதியும், கழகத் தோழர்கள் நலன் கருதியும் தங்களுக்கு எழுதி விளக்கம் கேட்ட கடிதங்களுக்கு நீங்கள் தானே பதில் சொல்ல வேண்டுமே தவிர தலைமைக் கழக நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் எப்படி பதில் சொல்வார்கள் என்கிற அடிப்படை புரிதல் இல்லாமல் அவர்களிடம் கடிந்து கொள்வது தங்களுக்கு அரசியல் பக்குவம் இல்லாததையே காட்டுகிறது

1993 ஆம் ஆண்டு மதிமுக துவங்கப்பட்ட காலத்தில் அன்று கழகத்தின் நிர்வாகிகளாக பொறுப்பு வகித்தவர்கள் பலர் தாங்கள் அரசியலுக்கு நுழைவதற்கு முன்பே திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, திமுகவை வளர்த்தவர்கள் என்பதும் உங்களை திமுகவை விட்டு வெளியேற்றிய போது அதுவரை பாடுபட்டு வளர்த்த திமுகவை விட்டு விலகி உங்களுக்காக நியாயம் கேட்டு உங்களை முன்னிலைப்படுத்தி மதிமுக உருவான போது தங்களோடு இணைந்து பாடுபட்டவர்கள் மதிமுக துவக்கப்பட்ட காலத்தில் தாங்கள் வாரிசு அரசியலுக்கு எதிராக உணர்ச்சிமிகு உரைகளை கேட்டே இலட்சக்கணக்கான தோழர்கள் தங்களின் பேச்சில் உறுதியும் உண்மையிருக்கும் என்று நம்பி தங்களை ஆதரித்தனர்.

ஆனால் தங்கள் குழப்ப அரசியல் நிலைப்பாடு காரணமாக தங்களை ஆதரித்த திமுகவில் பிரிந்துவந்த பெருவாரியான முன்னணித் தலைவர்களும். தோழர்களும் கழகத்தை விட்டு படிப்படியாக வெளியேறி, திமுகவிற்கே சென்று விட்டனர்.

தமிழ்நாட்டில் எனக்கு தெரிந்து எந்த அரசியல் கட்சியும் இப்படி பதவி கேட்டு தீர்மானங்களை நிறைவேற்றியதில்லை இப்படிப்பட்ட நடவடிக்கைகள் தங்கள் குடும்ப மறுமலர்ச்சிக்கு தான் என்பதை தங்களின் செயல்பாடு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இதுதான் அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி என்பதன் விளக்கமா என்பதை தங்களின் மனசாட்சியிடம் தாங்களே கேட்டுக்கொள்ளுங்கள். கடந்த முப்பது ஆண்டுகளாக உங்கள் உணர்ச்சி மிக்க பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்களை மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க கழகத்தை தாய்க் கழகமான திமுகவுடன் இணைத்துவிடுவது சமகால அரசியலுக்கு சாலச் சிறந்தது என அதில் குறிப்பிட்டிருந்தார்.

திருப்பூர் துரைசாமியின் கருத்து ஊடகங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மதிமுக திமுகவுடன் இணைக்கப்படாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் மதிமுக துணைப்பொதுச்செயலாளர்களில் ஒருவரான செஞ்சி ஏ.கே.மணி எழுதி உள்ள கடிதத்தில், மறுமலர்ச்சி தி.மு.க. அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு விரோதமாகவும், தன் சுயநலத்திற்காக அறிக்கை கொடுத்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் ஏ.கே.மணி எழுதி உள்ள கடிதம்
மதிமுக பொதுச்செயலாளர் ஏ.கே.மணி எழுதி உள்ள கடிதம்

இவர் அவைத் தலைவர் பொறுப்பில் நீடிப்பதற்கான தகுதியை இழந்துவிட்டார் என்பதால், அவரை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று பொதுச்செயலாளர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்