Minister Raghupathi: ’நீதிமன்றம் வெளியில் கொலை நடந்தால் நாங்கள் பொறுப்பாக முடியுமா?’ அமைச்சர் வினோத பதில்!
இந்த இடத்தில் அரிவாளால் யாரையாவது ஒருவரை வெட்ட முடியும் என்று நினைக்க முடியுமா? ஆனால் ’அமைச்சர் முன்னிலையில் அரிவால் வெட்டு’ என்று செய்தி வரும். அமைச்சர் முன்னிலையிலேயே என்ன வேண்டுமானால் நடக்கலாம். ஆனால் அதனை தடுக்க கூடிய சக்தி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு உள்ளது என அமைச்சர் ரகுபதி பதில்
நீதிமன்ற வளாகத்திற்கு வெளியில் கொலை நடந்தால் நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதியிடம் திருநெல்வேலி நீதிமன்றம் வளாகத்தில் மாயாண்டி என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அவர், எந்த சம்பவமுமே நடக்காமல் எதையும் தடுக்க முடியாது. ஆனால் சம்பவம் நடந்த 2 மணி நேரத்திலேயே 2 குற்றவாளிகள் உட்பட மொத்தம் 4 குற்றவாளிகளை பிடித்து உள்ளோம். மற்றவர்கள் தேடப்பட்டு வருகிறார்கள். காவல்துறை விரைந்து செயல்பட்டு 4 பேரை பிடித்து உள்ளோம் என்றால் காவல்துறையை பாராட்ட வேண்டும். ஆனால் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று குறை சொல்வது எந்த விதத்தில் நியாயம்.
இந்த இடத்தில் அரிவாளால் யாரையாவது ஒருவரை வெட்ட முடியும் என்று நினைக்க முடியுமா? ஆனால் அமைச்சர் முன்னிலையில் அரிவால் வெட்டு நடந்தது என்று செய்தி வரும். அமைச்சர் முன்னிலையிலேயே என்ன வேண்டுமானால் நடக்கலாம். ஆனால் அதனை தடுக்க கூடிய சக்தி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்கு உள்ளது.
சம்பவம் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியில்தான் நடந்தது. அதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும். குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்ததற்கு பாராட்ட வேண்டும். ஆனால் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பழைய பல்லவியை பாடுகிறார்கள். ஆனால் அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் சித்தரவதை செய்து துன்புறுத்தியதை நீங்கள் அறிவீர்கள். சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொன்ன எடப்பாடி, அம்பேத்கரை பற்றி கருத்து கேட்டால், ‘ஜெயக்குமாரின் கருத்துதான், என்னுடைய கருத்து’ என்று சொல்வதற்கு பொதுச்செயலாளர் எதற்கு? என கேள்வி எழுப்பினார்.
யூஜிசி நெட் தேர்வு குறித்து கேள்வி
பொங்கல் பண்டிகை என்று யூஜிசி நெட் தேர்வு வைக்கப்பட்டு உள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அதற்கு ஆட்சேயேபனை தெரிவிப்போம். பொங்கல் என்பது தமிழர் திருநாள். அதுமட்டுமின்றி தென் மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. 3 நாட்கள் தொடர் முறையாக வரும் நாளில் யூஜிசி தேர்வு வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. முதலமைச்சர் அவர்கள் யுஜிசியின் கவனத்திற்கு கொண்டு செல்வார் என கூறி உள்ளார்.
டாபிக்ஸ்