தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  எடப்பாடியின் இந்த ஆசை மட்டும் நிறைவேறாது – எதைச் சொல்கிறார் கே.என்.நேரு?

எடப்பாடியின் இந்த ஆசை மட்டும் நிறைவேறாது – எதைச் சொல்கிறார் கே.என்.நேரு?

Priyadarshini R HT Tamil
Apr 04, 2023 11:09 AM IST

Minister KN Nehru : சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரவேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமி உடைய ஆசையாக இருக்கிறது. ஆனால் அது ஒரு போதும் நிறைவேறாது. சிறப்பான ஆட்சியை முதல்வர் வழங்கி வருகிறார். எனவே, சரியாக சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற தேதியில் தான் சட்டமன்ற தேர்தல் நடக்கும்

திருச்சி அரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவிகளை துவங்கி வைக்கும் கே.என்.நேரு.
திருச்சி அரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவிகளை துவங்கி வைக்கும் கே.என்.நேரு.

ட்ரெண்டிங் செய்திகள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சென்னை உட்பட வார்டுகள் மறுவரையறை செய்யப்படும் பணிகள் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பின் துவங்கும். ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சருடன் ஆலோசித்து, அதற்காக ஒரு கமிட்டி அமைத்து யாருக்கும் பாதிப்பு இல்லாத வண்ணம் வார்டுகள் மறுவரையறை செய்யப்படும். 

சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வரவேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமி உடைய ஆசையாக இருக்கிறது. ஆனால் அது ஒரு போதும் நிறைவேறாது. சிறப்பான ஆட்சியை முதல்வர் வழங்கி வருகிறார். எனவே, சரியாக சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற தேதியில் தான் சட்டமன்ற தேர்தல் நடக்கும் 

திமுக ஆட்சியில் திருச்சி புறக்கணிக்கப்படவில்லை. மற்ற மாவட்டங்கள் பொறாமைப்படும் அளவிற்கு திருச்சிக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் கொடுத்திருக்கிறார். பத்திரிக்கைகள் தான் இப்படி ஒரு தோற்றத்தை உருவாக்குகின்றன. திருச்சியை முதல்வர் நேசிப்பவராக இருக்கிறார். 

அதிமுக கூட்டணி குறித்தோ அரசியல் தொடர்பான கேள்விகள் குறித்தோ நான் பதிலளிக்க மாட்டேன். திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தான் பதில் அளிப்பார்.

மெட்ரோ ரயில் திட்ட ஆய்வு பணிக்காக திருச்சியில் பறக்கும் சாலை அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ஆய்வு பணிகள் முடிந்த பின்பு உயர்மட்ட சாலை பணிகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும்.

திருச்சியில் புதிய காவிரி பால பணிகள் அமைப்பதற்கு மத்திய அரசு அலுவலகம் ஒன்றை அகற்ற வேண்டி உள்ளது. அது அகற்றப்பட்டு பின்பு பால பணிகள் தொடங்கும். இவ்வாறு நேரு பேட்டியில் தெரிவித்தார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்