தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Pooram Festival: கோலாகலமாக தொடங்கிய திருச்சூர் பூரம் திருவிழா!

Pooram Festival: கோலாகலமாக தொடங்கிய திருச்சூர் பூரம் திருவிழா!

Apr 19, 2024 05:27 PM IST Karthikeyan S
Apr 19, 2024 05:27 PM IST
  • கேரள மாநிலம் திருச்சூர் வடக்குநாதர் கோயில் அமைந்திருக்கும் தேக்கின்காடு பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளில் 'திருச்சூர் பூரம் திருவிழா' நடத்தப்படுகிறது. அந்தவகையில், திருச்சூரில் உலகப்புகழ் பெற்ற பூரம் திருவிழா கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. இந்த விழாவில் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கலந்து கொண்டுள்ளனர்.இதனால் அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
More