மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை.. சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி கைது!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை.. சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி கைது!

மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை.. சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி கைது!

Divya Sekar HT Tamil Published May 28, 2024 09:24 AM IST
Divya Sekar HT Tamil
Published May 28, 2024 09:24 AM IST

Priest Karthik Munusamy Case : பாலியல் வழக்கில் சிக்கிய சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமியை போலீசார் கைது செய்தனர்.

மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை.. சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி கைது!
மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை.. சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி கைது!

மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை

கோயிலுக்கு சாமி கும்பிட வந்த தன்னை வீட்டில் காரில் அழைத்துச் சென்று விடுவதாகக் கூறி தன்னிடம் அர்ச்சகர் அத்துமீறியதாகவும், மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பெண் அளித்த புகாரின் பேரில் சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர் மீது, விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் ஒருவர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மோசடி

 அவர் அளித்த புகாரில், "சென்னை மண்ணடி பகுதியில் உள்ள காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி என்பவர், அந்த கோயிலுக்கு நான் சென்றபோது என்னுடன் நட்பாக பழகி, என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மோசடி செய்துவிட்டார்" என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி மீது விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நம்பிக்கை மோசடி, பெண்ணை மானபங்கம்படுத்துதல், கொலை மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 

மேலும், தனிப்படை அமைத்து கார்த்திக் முனுசாமியை தீவிரமாகத் தேடிவரும் நிலையில், காளிகாம்பாள் கோயிலின் தலைமை அர்ச்சகர் காளிதாஸ் உட்பட ஐந்து நபர்களிடம் சம்மன் அனுப்பி காவல் நிலையம் வரவழைத்து நேரடியாக விசாரணை மேற்கொண்டு, அவர்கள் அழிக்கும் வாக்குமூலங்களை போலீசார் பதிவு செய்து வருகின்றனர்.

அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

இந்த நிலையில், அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரால் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. மேலும் இந்த லுக் அவுட் நோட்டீஸை, அனைத்து விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டது. இதுமட்டும் அல்லாது, பாதிக்கப்பட்ட பெண் தொகுப்பாளருக்கு கருக்கலைப்பு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கருக்கலைப்பு குற்றச்சாட்டில் சம்மந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்குச் சென்று போலீசார் கருப்பு கலைப்பு செய்தது உண்மைதானா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் அளித்த புகாரி அடிப்படையில்  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் திடீரென கார்த்திக் முனுசாமி தலைமறைவானார். இந்த நிலையில் அவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த பூசாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.