Chennai : சென்னையில் சர்வதேச இஸ்லாமிய தீவிரவாத அமைப்பை சேர்ந்த மூன்று பேர் கைது.. போலீசார் தீவிர விசாரணை!
சென்னையில் முதன்முறையாக இது போன்ற சர்வதேச இஸ்லாமிய தீவிரவாத அமைப்பை சேர்ந்த நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். குறிப்பாக இவர்கள் அந்த அமைப்பின் ஐடியாலஜியை பரப்புவது முக்கியமாக செய்து வருவது தெரிய வந்துள்ளது.
சென்னையில் ஹிஜிபுதாகிர் சர்வதேச தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஆதரவாளர்கள் மூன்று பேரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் உபா சட்டம் பாய்ந்துள்ளது.
குறிப்பாக கைதான மூன்று பேரும் பல வருடங்களுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட இஜிபுதாஹிர் அமைப்பின் மூலமாக உலகளாவிய காலிபெட் இஸ்லாமிய கொள்கை முறையை சரியா சட்டத்தின் அடிப்படையில் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது . குறிப்பாக கைதானவர்கள் அமீர் உசேன் என்ற பொறியாளரும் அவரது தந்தை மன்சூர் மற்றும் சகோதரர் அப்துல் ரகுமான் ஆவார். அமீர் உசேன் டாக்டரேட் பட்டமும் பெற்றுள்ளார்
காலிபெட் கொள்கை முறையில் மக்கள் செயல்பட வேண்டும் என வலியுறுத்தல்
சென்னையில் முதன்முறையாக இது போன்ற சர்வதேச இஸ்லாமிய தீவிரவாத அமைப்பை சேர்ந்த நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். குறிப்பாக இவர்கள் அந்த அமைப்பின் ஐடியாலஜியை பரப்புவது முக்கியமாக செய்து வருவது தெரிய வந்துள்ளது. அமீர் ஹுசைன் youtube களில் எதற்காக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டதாகவும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக பொது தேர்தலுக்கு எதிரான கொள்கையை கொண்டிருக்கிற காரணத்தினால் அதற்கு ஏற்ற போல் பல்வேறு கருத்துக்களை மக்களிடம் பரப்பி வருவதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர்
மேலும் இந்த அமைப்பின் கொள்கைப்படி ஜனநாயகத்தின் நம்பிக்கை இல்லாமல் காலிபெட் கொள்கை முறையில் மக்கள் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர் இதன் காரணமாக தற்போது நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இஸ்லாமியர்கள் வாக்களிக்கக் கூடாது என பரப்புரை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
புரட்சி படையை சேர்ந்தவர்களிடமும் தங்கள் கொள்கையை பரப்பும் நடவடிக்கை
மேலும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கூட்டங்கள் நடத்துவதும் குறிப்பிட்ட நபர்களை மட்டும் அழைத்து பூட்டப்பட்ட அறைக்குள் கூட்டங்களை நடத்தியதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர் ராயப்பேட்டை பகுதிகளில் அதிகளவு கூட்டங்களை நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு வாரம் நடத்தப்பட்ட கூட்டங்களில் ஆட்கள் அதிகமாகிக் கொண்டே சென்று இருப்பதாகவும் கண்டுபிடித்தனர்.
தற்போது இவர்கள் பொதுமக்களிடம் பரப்புரை மேற்கொள்ளுவதோடு மட்டுமல்லாது புரட்சி படையை சேர்ந்தவர்களிடமும் தங்கள் கொள்கையை பரப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவர்களுடன் தொடர்பிற்கும் நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை
இவ்வாறு தேசவிரோத செயல்களில் ஈடுபடுகிற காரணத்தினால் இந்த மூவர் மீதும் ஊபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர் இவர்களுடன் தொடர்பிற்கும் நபர்கள் யார் என்பது குறித்தும் இதற்கு நிதி எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9