PM Modi: ராமர் கோயிலுக்கு எடுத்துச் செல்ல அர்ச்சகர்கள் பிரதமரிடம் வழங்கிய பரிசும்.. மவுத் ஆர்கான் வாசித்த யானையும்!
ராமர் கோயிலுக்கு எடுத்துச் செல்ல அர்ச்சகர்கள் பிரதமரிடம் வழங்கிய பரிசும் மவுத் ஆர்கான் வாசித்த யானை பற்றியும் அறிவோம்.
வட இந்தியாவில் உள்ள இந்துக்களின் புனித நகரமான ‘அயோத்தியில்’, வரும் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் குடமுழுக்கு நடைபெறுகிறது. இதனால் விரதம் இருக்கும் பிரதமர் மோடி, ராமர் தொடர்புடைய இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டுவருகிறார். இதன் தொடர்ச்சியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலுக்கு வந்தடைந்த அவர், தரிசனத்தை முடித்து விட்டு ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் சென்றடைந்தார்.
முன்னதாக, ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி ஆலயத்துக்குச் சென்ற பிரதமர் மோடியிடம், ராமர் கோயிலுக்கு எடுத்துச் செல்ல, தலைமை அர்ச்சகர்கள் குழு ஒரு கூடை நிறைய பரிசு ஒன்றினை அளித்தனர். ஸ்ரீராமர் மற்றும் சீதாப் பிராட்டி அணிவிக்கப்பயன்படும் ஆடைகள் தரப்பட்டுள்ளன. பின் கோயில் வளாகத்தில் உள்ள 'ஆண்டாள்' என்ற யானைக்கு உணவு அளித்து ஆசி பெற்றார், பிரதமர் மோடி.
அப்போது அந்த ஆண்டாள் யானை, பிரதமர் முன்பு, மவுத் ஆர்கான் வாசித்து காட்டி அசத்தியது.
அதனைத்தொடர்ந்து, ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி ஆலயத்தில் கம்பர் முதன்முதலில் தமிழ் ராமாயணத்தைப் பாடிய அந்த இடத்தில் பிரதமர் மோடி அமர்ந்து அப்பாடல்களைக் கேட்டு, தமிழ், தமிழ்நாடு மற்றும் ஸ்ரீராமருக்கு இடையேயான ஆழமான பந்தத்தை உலக மக்களுக்கு மறைமுகமாக தெரியப்படுத்தினார்.
பின் ஸ்ரீரங்கத்தில் தரிசனத்தை முடித்துவிட்டு, ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி, அங்கு அருள்மிகு ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்வது மட்டுமின்றி, சிறப்புப் பூஜைகளிலும் பங்கேற்கிறார்.
அயோத்தியில் ராமர் கோயிலின் குடமுழுக்கினை ஒட்டி, கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி, பல்வேறு மாநிலங்களில் உள்ள ராமர் தொடர்புடைய கோயில்களுக்குச் செல்கிறார். பின், அவர் மராத்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் ராமாயண பிரசங்கத்தில் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9