தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Job Opportunities For Jobless And Aavin Jobs

தமிழ்நாடு திறன் மேப்பாட்டு கழகத்தில் இரண்டரை லட்சம் மாத ஊதியத்தில் வேலை

Priyadarshini R HT Tamil
Jan 17, 2023 09:47 AM IST

தமிழ்நாடு ஆவின் நிறுவனம் மற்றும் திறன் மேப்பாட்டு கழகங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணபிக்க அழைப்பு டுக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு தேவையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

நிறுவனம் – ஆவின். 

பணியிடம் – கால்நடை ஆலோசகர். 

தகுதி – ஆவின் ஈரோடு அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பிஎஸ்சி முடித்திருக்க வேண்டும். 

தேர்வு செயல்முறை – ஆவின் நிறுவன பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை – தகுதியான விண்ணப்பதாரர்கள் வரும் 24ம் தேதி காலை 11 மணிக்கு சித்தோடு ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவு ஒன்றியம் என்ற முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நேர்காணலுக்கு வரும்போது தகுதியானவர்கள் கல்வித்தகுதி, அசல் சான்றிதழ்கள், விண்ணப்பம் மற்றும் ஓட்டுனர் உரிமத்துடன் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தில் காலியாக உள்ள விபி, ஏவிபி, சீனியர் அசோசியேட்ஸ் மற்றும் மற்ற பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 

பணியின் பெயர் – விபி, ஏவிப், சீனியர் அசோசியேட்ஸ் மற்றும் மற்ற பணிகள் 

தகுதி – விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பிடெக், பிஇ, எம்சிஏ, எம்எஸ்சி, பிபிஏ, எம்பிஏ இதில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் – இப்பணிக்கென தேர்ந்தெடுக்கப்பட்டால் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை மாத ஊதியம் வழங்கப்படும். 

வயது வரம்பு – இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும். 

தேர்வு செயல்முறை – தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை – ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ தளமான www.tnskill.tn.gov.in என்ற இணைய முகவரியிலும், விண்ணப்பங்களை https://mis.sids.co.in/tnsdc2 என்ற முகவரியிலும் பெற்றுக்கொள்ளலாம். 10ம் தேதி முதல் விண்ணப்பங்கள் தயாராக உள்ளன. வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்