Ponmudy: ‘மத்திய சிறையில், ஸ்டாலின் அமைச்சர்களுக்கு ஒரு தனி கட்டிடம்’ அண்ணாமலை விளாசல்
Annamalai: "மக்களின் வரிப் பணத்தை விஞ்ஞானப்பூர்வமாக மோசடி செய்யும் கலையில் பட்டம் பெற்றுள்ள ஊழலின் ஊற்று, இன்று உடைந்து நொறுங்கியிருக்கிறது அண்ணாமலை விமர்சனம்
திமுக அமைச்சர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள எண்ணற்ற ஊழல் வழக்குகளைக் கணக்கில் கொள்ளும்போது, மத்திய சிறையில், ஸ்டாலின் அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போலத் தெரிகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி பொன்முடி ஆகிய இருவருக்கும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பொன்முடி சட்டமன்ற உறுப்பினர் பதவியில் தகுதி இழந்ததோடு, அமைச்சர் பதவியையும் இழந்துள்ளார்.
மேலும் இருவருக்கும் தலா 50 லட்சம் அபராதம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்துள்ளார்.
6 மாதம் தண்டனையை நிறுத்தி வைக்க பொன்முடி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்த நீதிபதி ஜெயச்சந்திரன், அதன் பின் தேவையென்றால், நீதிமன்றத்தில் முறையிடலாம் என்று நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் திமுக அமைச்சர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள எண்ணற்ற ஊழல் வழக்குகளைக் கணக்கில் கொள்ளும்போது, மத்திய சிறையில், திரு ஸ்டாலின் அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போலத் தெரிகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனடு ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, "மக்களின் வரிப் பணத்தை விஞ்ஞானப்பூர்வமாக மோசடி செய்யும் கலையில் பட்டம் பெற்றுள்ள ஊழலின் ஊற்று, இன்று உடைந்து நொறுங்கியிருக்கிறது. ஏற்கனவே ஒரு அமைச்சர் திரு செந்தில் பாலாஜி சிறையில் இருக்கையில், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்புக்கு பின், மற்றொரு அமைச்சர் திரு பொன்முடி, அவருடன் சிறையில் இணைகிறார்.
திமுக அமைச்சர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள எண்ணற்ற ஊழல் வழக்குகளைக் கணக்கில் கொள்ளும்போது, மத்திய சிறையில், திரு ஸ்டாலின் அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போலத் தெரிகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9