தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Help For Children Education: விளிம்பு நிலை குழந்தைகளின் கல்விக்காக இந்த உதவியை செய்தால் நீங்களும் ஹீரோதான்!

Help for Children Education: விளிம்பு நிலை குழந்தைகளின் கல்விக்காக இந்த உதவியை செய்தால் நீங்களும் ஹீரோதான்!

Manigandan K T HT Tamil
Nov 14, 2023 11:54 AM IST

மாதம் ஒரு முறை நீங்கள் கனிவோடு வழங்கி உதவும் ஒரு குறைந்தபட்சம் 10 ரூபாய் விளிம்பு நிலை சமூகத்தின் குழந்தைகளின் வாழ்வு மற்றும் அவர்களின் கல்வியில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை விளைவிக்கக்கூடிய மாபெரும் சக்தி கொண்டது என்று அரசு சாரா அமைப்பான “குழந்தைகள் “உரிமைகள் மற்றும் நீங்கள்” (CRY) கூறுகிறது

விளிம்பு நிலை குழந்தைகளின் கல்விக்காக ரூ.10 மாதம் நன்கொடை கொடுக்கலாம்
விளிம்பு நிலை குழந்தைகளின் கல்விக்காக ரூ.10 மாதம் நன்கொடை கொடுக்கலாம் (https://www.cry.org/)

ட்ரெண்டிங் செய்திகள்

"இந்த உன்னதமான இயக்கத்தின் ஒரு அங்கமாக விளங்குவதற்காக  ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுத்து, ஹீரோ இன் யூ பிரச்சாரத்தை தொடங்குவதில் நாங்கள் மிகவும் உற்சாகமடைந்திருக்கிறோம். சிறு துளியே பெருவெள்ளமாக பெருகி மாபெரும் மாற்றத்தை விளைவிக்கக் கூடிய ஆற்றலைக் கொண்டது  என்ற கருத்தாக்கமே  இந்த பிரச்சாரத்தின் மையமாக அமைந்துள்ளது ,” என்று CRY அமைப்பின் வளங்கள் திரட்டும் துறை இயக்குனர்  யாமினி கபூர் கூறினார்.   

நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளை மேற்கோள் காட்டிப் பேசிய யாமினி, தொடக்கக் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வி அளவில் 2022 – 23 ஆம்  ஆண்டில் நாடு முழுவதும் 12.5 இலட்சத்துக்கும் அதிகமான  மாணவர்கள் கல்வியை இடை நிறுத்தம் செய்திருக்கிறார்கள்” என்ற கவலையளிக்கும் செய்தியை தெரிவித்தார்.

“கல்வி என்பது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்ற நோக்கத்தையுடைய  ஒரு சமுதாயத்தில் தரமான கல்வி கற்பதற்கான வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி தொடர்பான இடைவெளிகளை நிரப்பவும் அவர்களுக்கு அதிகாரம் வழங்குவதையும் CRY அமைப்பின்  ஹீரோ இன் யூ பிரச்சாரம்  தனது  நோக்கமாகக் கொண்டுள்ளது. நமது குழந்தைப் பருவ காலத்தில்  கருத்து வடிவிலிருந்த  சேமிப்பு உண்டியல் நமது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஒரு உன்னதமான வங்கியாக இப்போது செயல்படட்டும்.  கல்வி கற்கவும் , வளர்ச்சி காணவும்   மற்றும் மேம்பாடு அடைவதற்கான  அனைத்து சிறப்புத் தகுதிகளை கொண்ட நமது  குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை மாதம் ஒரு குறைந்தபட்சம் 10 ரூபாயோடு  நான் அனைவரும் ஒன்றிணைந்து மாற்றியமைத்து சிறக்க செய்யமுடியும்” என்பதை   வலியுறுத்திக் கூறினார்.  

 “நிதித் தட்டுப்பாடுகள் அல்லது சமூகத் தடைகள் காரணமாக எந்த ஒரு குழந்தையும் கைவிடப்படக் கூடாது என்பதில் CRY நம்பிக்கை கொண்டுள்ளது. சமூகம், குடும்பங்கள் மற்றும் தனிநபர்களை ஒன்று திரட்டுவதன் மூலம் ஒரு நேர்மறையான மாற்றத்துக்கான சிறு சிறு அதிர்வலைகளை இந்தப் பிரச்சாரம் நாடு முழுவதும் உருவாக்கும் என்பதில் CRY அமைப்பு பெரும் நம்பிக்கை கொண்டுள்ளது. ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ள கல்வியை அணுகுவதற்கு உரிமையை மீட்டுத்  தருவதில் நமக்கிருக்கும் உறுதிப்பாட்டை  இந்தப் பிரச்சாரம் பிரதிபலிக்கிறது” என்று யாமினி மேலும் கூறினார்

2024 பிப்ரவரி மாதம் வரை தொடர இருக்கும் ஹீரோ இன் யூ பிரச்சாரத்தின் மூலம்   பத்து இலட்சம் ஆதரவாளர்களை ஒன்றிணைத்துக் கொள்வதை இது  இதன் இலக்காகக் கொண்டுள்ளது.  மற்றும் மக்களிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் ஹீரோக்களை வெளிக்கொணர்ந்து அவர்களின் ஆதரவு மூலம்,  இந்த வருடத்தில்  கூடுதலாக 2 இலட்சம் குழந்தைகள் பள்ளிக்கு திரும்பி   தங்கள் கல்வியை தொடருவதை  உறுதி செய்வதுதான் இந்த பிரச்சாரத்தின் நோக்கம்” என்றும்  அவர் விளக்கிக் கூறினார்

அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமான ஒரு சமுதாயத்தை  உருவாக்குவதற்கு சிறப்பான வாய்ப்பாக  இந்த பிரச்சாரம் அமையும் என்றும்   யாமினி கூறினார் “அனைவரையும் இந்தியாவின்  குழந்தைகளுக்காக ஒன்று சேர்ப்பதற்கான ஒரு முயற்சிதான் இது. இதற்குத் தேவை  ஒரு சிறு பங்களிப்பே:  மாதம் குறைந்தபட்சம்  ஒரு 10 ரூபாயை நன்கொடையாக தந்தாலே போதும். இதில் ஆர்வமுள்ளவர்கள் CRY அமைப்பின் அதிகாரபூர்வமான வலைத்தளத்திற்கு (www.cry.org) வருகை தந்து  “மாதம் ஒரு 10 ரூபாய் திட்டத்தில்” தங்களை இணைத்துக் கொள்ளலாம். இருப்பினும் 10 ரூபாய் என்பது பெயரளவுக்கு ஒரு குறைந்த பட்ச தொகை என்ற போதிலும் விருப்பமுள்ளவர்கள் மனதுக்குகந்த அளவுக்கு அதிகமாக தாங்கள் விரும்பிய எந்த ஒரு பெரிய தொகையையும் வழங்கலாம்” என்று கூறினார்.   

பள்ளியை விட்டு விலகிய பல லட்சக்கணக்கான மாணவர்களை சென்றடைந்து அவர்களுக்குக் கல்வி வழங்க இவ்வாறு சேரும் தொகை ஒரு சிறப்பு மிக்க  பெரும் நிதித் தொகுப்பாக உருவாகி CRY அமைப்புக்கு பணியாற்ற உதவும். இந்த எளிய சிறு சிறு  பங்களிப்புக்களின் திரளான ஒட்டுமொத்த ஆற்றல் இந்தக் குழந்தைகளின் வாழ்வில் ஒரு நீடித்த நிலையான  மாற்றத்தை விளைவிக்கும் தாக்கங்களை ஏற்படுத்தும்.  

ஒவ்வொரு குழந்தையின் கல்விக்கான உரிமை நிலைநாட்டப்படுவதை  உறுதி செய்வதற்கான  இந்த உன்னதமான முன்முயற்சியில்  தங்களை இணைத்துக் கொள்ள அனைத்து பிரிவைச் சேர்ந்த தனிநபர்களையும்  CRY அமைப்பு  வரவேற்கிறது.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்