Weather Update : மக்களே உஷார்.. நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்ட போகுது!
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர் தேனி, திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மக்களே உஷார்.. நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்ட போகுது!
கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை (சமவெளிப்பகுதிகள்):
அதிகபட்ச வெப்பநிலை : மதுரை (விமான நிலையம்): 39.7° செல்சியஸ்
குறைந்தபட்ச வெப்பநிலை :
ஈரோடு : 20.0° செல்சியஸ்