CM MK Stalin: தமிழக மீனவர்களுக்கு வரலாறு காணாத நெருக்கடி..மத்திய அமைச்சருக்கு முதல்வர் அனுப்பிய முக்கிய கடிதம் என்ன?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Cm Mk Stalin: தமிழக மீனவர்களுக்கு வரலாறு காணாத நெருக்கடி..மத்திய அமைச்சருக்கு முதல்வர் அனுப்பிய முக்கிய கடிதம் என்ன?

CM MK Stalin: தமிழக மீனவர்களுக்கு வரலாறு காணாத நெருக்கடி..மத்திய அமைச்சருக்கு முதல்வர் அனுப்பிய முக்கிய கடிதம் என்ன?

Karthikeyan S HT Tamil
Jul 11, 2024 09:07 PM IST

CM MK Stalin Letter: இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்திட வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

CM MK Stalin: தமிழக மீனவர்களுக்கு வரலாறு காணாத நெருக்கடி..மத்திய அமைச்சருக்கு முதல்வர் அனுப்பிய முக்கிய கடிதம் என்ன?
CM MK Stalin: தமிழக மீனவர்களுக்கு வரலாறு காணாத நெருக்கடி..மத்திய அமைச்சருக்கு முதல்வர் அனுப்பிய முக்கிய கடிதம் என்ன?

தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 11) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள், IND-TN-08-MM-364, IND-TN-16-MM-2043 மற்றும் IND-TN-08-MM-1478 ஆகிய பதிவெண்கள் கொண்ட மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். இந்நிலையில், இலங்கைக் கடற்படையினரால் இன்று (ஜூலை 11) கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடித் தொழிலையே தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள நம் நாட்டு மீனவர்கள், வரலாறு காணாத நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.

தற்போது 173 மீன்பிடிப் படகுகளும், 80 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. மீனவர்கள் இதுபோன்று சிறைபிடிக்கப்படுவது, மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ளதோடு, அவர்களது குடும்பத்தினரை பெரும் சோகத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

எனவே, இந்த விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறை வலுவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்திட வேண்டும். இது தொடர்பாக உரிய தூதரக நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டுமென்று முதல்வர் தனது கடிதத்தில் வெளியுறவுத் துறை அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் இன்று சிறைப்பிடித்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் அவர்களது 3 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர். இலங்கையில் உள்ள காங்கேசன் துறை கடற்படை தளத்தில் வைத்து, சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை கடற்படையினரால் ஒரே சமயத்தில் 13 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு இருப்பது புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு

கடந்த இரு வாரங்களில் மட்டும் 40-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தற்போது புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தான், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறை வலுவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை உடனடியாக மேற்கொண்டு, இலங்கை வசமுள்ள அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்திட வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.