Top 10 News : மாரடைப்பால் உயிரிழந்த ஜிம் உரிமையாளர், 10 மாவட்டங்களில் கனமழை.. திருமலை நாயக்கர் அரண்மனைக்கு இலவச அனுமதி!
மாரடைப்பால் உயிரிழந்த ஜிம் உரிமையாளர், 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என இன்றைய டாப் 10 செய்திகளை பார்க்கலாம்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்க சென்னை உயர்நீதிமன்றம் தடை, மாரடைப்பால் உயிரிழந்த ஜிம் உரிமையாளர், 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என இன்றைய டாப் 10 செய்திகளை பார்க்கலாம்.
திருமலை நாயக்கர் அரண்மனைக்கு இலவச அனுமதி
மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையை இன்று(நவ.19) முதல் நவ.25ஆம் தேதி வரை இலவசமாக பொதுமக்கள் கண்டுகளிக்கலாம். உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சின்னங்கள் மற்றும் அருங்காட்சியங்களை இலவசமாக பார்க்க தமிழக அரசு உத்தரவு.
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளதை நாம் அறிவோம். இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தின் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் லேசான சாரல் விழக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
மாமல்லபுரத்தில் இன்று இலவச அனுமதி
பாரம்பரிய சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை இன்று(நவ. 19) இலவசமாக சுற்றி பார்க்கலாம். வெண்ணெய் உருட்டு பாறை, அர்ஜுனன் தபசு, கடற்கரை கோயில், ஐந்து ரதம், கலங்கரை விளக்கம், புலிகுகை, ஆகியவற்றை கட்டணமில்லாமல் சுற்றிப் பார்க்க சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி.
அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்த உடற்பயிற்சி கூட உரிமையாளர் உயிரிழப்பு!
சேலம் கோட்டை பகுதியை சேர்ந்த மகாதீர் முகமது என்பவர் உடற்பயிற்சி கூடம் வைத்துள்ளார். நேற்று முன்தினம் காலை உடற்பயிற்சி கூடத்திற்கு வந்த மற்ற நபர்கள் தங்களின் உடற்பயிற்சியை முடிவித்துவிட்டு சென்றுள்ளனர். மகாதீர் முகமது தானும் உடற்பயிற்சியை முடித்துவிட்டு குளிப்பதற்காக குளியலறைக்கு சென்றவுள்ளார். நீண்ட நேரமாகியும் மகாதீர் முகமது வெளியே வராததால் அவரது ஓட்டுநர் குளியலறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மகாதீர் மூக்கிலிருந்து ரத்தம் வழிந்தபடி மயக்க நிலையில் இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், அருகிலுள்ள பொதுமக்களின் உதவியுடன் மகாதீர்-ஐ சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மகாதீர் முகமது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ரயில்வே நிர்வாகம் மறுப்பு
ரயிலில் பயணம் செய்த போது சிக்கன் ரைஸ் சாப்பிட்ட கோவையைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் மாணவி குறித்த குற்றச்சாட்டுக்கு ரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளது.
பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க கூடாது- ஹைகோர்ட்!
2024ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் அவரது பெயரை பயன்படுத்தாமல் விருது வழங்கலாம் என தெரிவித்துள்ளது.
தங்கம் விலை நிலவரம்
நேற்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 60 ரூபாயை உயர்ந்து 6,995 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு சவரன் தங்கத்திற்கு 480 ரூபாய் உயர்ந்து 55,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 7,065 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 56ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
திருப்பத்தூர் கலெக்டரிடம் கண்ணீருடன் மனு அளித்த இளைஞர்
இனிமேல் என்னுடைய காதலியை பார்க்கவே முடியாது என்று சொல்கிறார்கள். எனவே, நான் காதலிக்கும் பெண்ணின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவரை கண்டுபிடித்து என்னுடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளைஞர் ஒருவர் கலெக்டரிடம் மனு அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை தந்து வருகிறது.
லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனை
தொழில் அதிபர் லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் மொத்தம் 12.41 கோடி ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
லிஃப்ட் கேட்டு சென்றவர் விபத்தில் உயிரிழப்பு
ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கேட்டு சென்றவர், விபத்தில் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பான காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
டாபிக்ஸ்