Top 10 News : லாட்டரி மார்ட்டின் இடங்களில் 2வது நாளாக சோதனை.. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்!
லாட்டரி மார்ட்டின் இடங்களில் 2வது நாளாக சோதனை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம், இன்று 21 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு என இன்றைய டாப் 10 செய்திகளை பார்க்கலாம்.

லாட்டரி அதிபர் மார்ட்டின், மருமகன் வீடுகளில் அமலாக்கத்துறை 2-வது நாளாக சோதனை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நாளை தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது, இன்று 21 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு என இன்றைய டாப் 10 செய்திகளை பார்க்கலாம்.
லாட்டரி மார்ட்டின் இடங்களில் 2வது நாளாக சோதனை
பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு, அலுவலகங்களில் 2வது நாளாக அமலாக்கத் துறை சோதனை. கோவை துடியலூரில் உள்ள வீடு அலுவலகம் மற்றும் ஹோமியோபதி கல்லூரியில் மத்திய போலீசாரின் பாதுகாப்புடன் சோதனை.சென்னையிலும் போயஸ் தோட்டத்தில் உள்ள வீடு, அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நீடிக்கிறது.விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனாவுக்கு சொந்தமான இடங்களிலும் 2வது நாளாக அமலாக்கத் துறை சோதனை. ஏற்கனவே, மார்ட்டினுக்கு தொடர்புடைய ரூ.451 கோடி சொத்துகளை முடக்கிய நிலையில் சோதனை
21 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக் கடலில் கடந்த 12-ந் தேதி நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. இருப்பினும், வடதமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் சென்னைக்கு அருகே வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.