சென்னை அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவச உணவு - முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை - எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட பதிவில்,” நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை - எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் இன்று பிற்பகல் ஒரு மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் ராணிப்பேட்டை வேலூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
திருப்பத்தூர் திருவண்ணாமலை தென்காசி விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் 15.8 செ.மீ., மழை பதிவு
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 15.8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக கத்திவாக்கத்தில் - 24.8 செ.மீ, மணலி டவுன் - 24.5 செ.மீ, கொளத்தூர் - 22 செ.மீ
பெரம்பூர் - 22 செ.மீ
அயப்பாக்கம் - 22 செ.மீ
அண்ணா நகர் -20 செ.மீ
மணலி - 19 செ.மீ
புழல் - 19 செ.மீ
திருவொற்றியூர் - 19 செ.மீ வேளச்சேரி - 18 செ.மீ அம்பத்தூரில் - 17 செ.மீ
பேஷன் பிரிட்ஜ் - 17 செ.மீ
மாதவரம் 17 செ.மீ., மழையும் பதிவாகி உள்ளது.
உதவி எண்கள் அறிவிப்பு
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மழை தொடர்பான புகார்கள் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பாக மாநகராட்சியின் 150 இணைப்புகளுடன் கூடிய 1913 என்ற உதவி எண்ணிலும், கட்டுப்பாட்டு அறையில் உள்ள 044 2561 9204, 044 25619206 மற்றும் 044 2561 9207 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மேலும், மாநகராட்சியின் chennaicorporation.gov.in என்ற இணையதளம், நம்ம சென்னை செயலி, Greater Chennai Corporation Facebook. @chennaicorp என்ற Instagram-லும்,@chennaicorp என்ற Thread-லும், @chennaicorp என்ற X App ஆகிய சமூக வலைதளங்களின் வாயிலாகவும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்