வேட்டையனுக்கு மழை வைத்த வேட்டு.. லாலாபாடும் லைகா.. வசூலில் பேரிடி.. வேட்டையன் வசூல் எவ்வளவு தெரியுமா கண்ணா?
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் வேட்டையன் திரைப்படத்திற்கு மழை வேட்டு வைத்ததா? இல்லையா? என்பதை இங்கே பார்க்கலாம்.

வேட்டையனுக்கு மழை வைத்த வேட்டு.. லாலாபாடும் லைகா.. வசூலில் பேரிடி.. வேட்டையன் வசூல் எவ்வளவு தெரியுமா கண்ணா?
ரஜினிகாந்த நடித்து கடந்த அக்டோபர் 10ம் தேதி வெளியான திரைப்படம் ‘வேட்டையன்’ . இந்தத் திரைப்படம் வெளியாகி நேற்றோடு 6 வது நாள் முடிந்திருக்கிறது. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்தத்திரைப்படத்தின் வசூல் நேற்று பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
வேட்டையன் வசூல் எவ்வளவு
ஆம், நேற்றைய தினம் ‘வேட்டையன்’ திரைப்படம் 4.25 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படம் வெளியான அன்றைய தினம் 31.7 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், இரண்டாவது நாளில் 24 கோடி வசூல் செய்தது. மூன்றாவது நாளில் 26.75 கோடி வசூல் கிடைத்த நிலையில், நான்காம் நாளில் 22.3 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. 5ம் நாளான நேற்று முன் தினம் வேட்டையன் திரைப்படம் 5.6 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.