தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Senthil Balaji Case : இன்றுடன் ஒரு வருஷம் ஆகுது.. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு கடந்து வந்த பாதை!

Senthil Balaji Case : இன்றுடன் ஒரு வருஷம் ஆகுது.. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு கடந்து வந்த பாதை!

Divya Sekar HT Tamil
Jun 14, 2024 09:40 AM IST

Senthil Balaji Case : இன்றுடன் செந்தில் பாலாஜி கைதாகி ஓராண்டு நிறைவடையும் நிலையில் அவர் மீதான வழக்குகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இன்றுடன் ஒரு வருஷம் ஆகுது.. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு கடந்து வந்த பாதை!
இன்றுடன் ஒரு வருஷம் ஆகுது.. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு கடந்து வந்த பாதை!

அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில் திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.

சுமார் 350 நாட்களுக்கும் மேலாக செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் பலமுறை அவரது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 30க்கும் மேற்பட்ட முறை அவரது நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் தன் மீது பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீதான உத்தரவு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்ற ( ஜூன் 14) ஆம் தேதி பிறப்பிக்கப்பட இருக்கிறது. ஜூன் 14ஆம் தேதி கடந்த ஆண்டு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 14ஆம் தேதி இந்த வழக்கில் முக்கிய உத்தரவு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓராண்டாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு கடந்து வந்த பாதை

இந்நிலையில் கடந்த ஓராண்டாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு கடந்து வந்த பாதை குறித்து பார்க்கலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

 மறைந்த முதலமைச்சர் ஜெயலிதாவின் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக வலம் வந்த செந்தில் பாலாஜி 2014 இல் ஓட்டுநர் நடத்துனர் பணி நியமனத்தில் முறையீடு செய்ததாக எழுந்த புகாரில் சிக்கினார்

கடந்த 2015'ல் தேவ சகாயம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதில் செந்தில் பாலாஜி பெயர் இடம் பெறவில்லை.  பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் மைத்துனர் கார்த்திக் போக்குவரத்து அதிகாரிகள் உள்பட 40 பேர் மீது 2016 ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

2016-ல் அமலாக்கத்துறை வழக்குபதிவு

கடந்த 2015ல் தொடர் சிக்கலில் மாட்டிக்கொண்ட செந்தில் பாலாஜியின் அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவியை முதலமைச்சர் ஜெயலலிதா பறித்தார். பண மோசடி தொடர்பாக செந்தில் பாலாஜி மீது கடந்த 2016 ல் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது .

இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி செந்தில் பாலாஜிக்கு கடந்த 2019ல் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அமலாக்கத்துறையால் அனுப்பிய இந்த சம்மன் சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி வெற்றி பெற்று திமுக அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது

அடுத்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரி கார்த்திக் தசாரி மேல் முறையீடு செய்தார். இதே போல காவல்துறை விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதால் சிறப்பு புலனாய் விசாரணைக்கு அனுமதிக்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் தரப்பும் உச்ச நீதிமன்றத்தை அணுகியது

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி செந்தில் பாலாஜியும் கடந்த 2022- ல் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணா முராரி ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை இரண்டு மாதத்திற்குள் விசாரணை முடிக்கும்படி குற்ற பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது

சட்ட விரோத பரிமாற்றம் தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி நாள் முழுவதும் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அதை வேளையில் வீட்டிலிருந்த செந்தில் பாலாஜி எங்கும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. மறுநாள் 14ஆம் தேதி அதிகாலை செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.

தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைதான சில நாட்களில் நெஞ்சு வலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. சிறையில் இருந்தபடியே அவ்வப்போது மருத்துவ சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு சென்னை அமரவு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்

அதே வேளையில் கடந்த ஆண்டு கைதான செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் இதுவரை 39 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தனக்கு அமலாக்கத்துறை வழங்கிய வங்கி ஆவணங்கள் ஒரு மாதிரியாகவும் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த வங்கி ஆவணங்கள் வேறுமாதியாகவும் இருப்பதாக கூறி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தனியாக மனு ஒன்று தாக்கல் செய்தார்.

இன்று மீண்டும் விசாரணை

இது தொடர்பான வழக்கில் வங்கி ஆவணங்களை பெற்றுக் கொள்ள கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். சென்னை அமர்வு நீதிமன்றம் உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மே 15ஆம் தேதி கடைசியாக விசாரணைக்கு வந்தது.

இன்றுடன் செந்தில் பாலாஜி கைதாகி ஓராண்டு நிறைவடையும் நிலையில் அவர் மீதான வழக்குகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.