தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Annamalai Vs Jayakumar: ’நான் லுங்கிதான் கட்டுறன்! உன்னை போல் நைட்டி போடல!’ அண்ணாமலையை விளாசிய ஜெயக்குமார்

Annamalai Vs Jayakumar: ’நான் லுங்கிதான் கட்டுறன்! உன்னை போல் நைட்டி போடல!’ அண்ணாமலையை விளாசிய ஜெயக்குமார்

Kathiravan V HT Tamil
Jul 11, 2024 01:33 PM IST

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள், என்னை லுங்கி கட்டிக் கொண்டு பேட்டிக் கொடுப்பதாக கூறி உள்ளார். லுங்கி என்பது அவமதிக்க கூடிய ஆடையா? என ஜெயக்குமார் கேள்வி

Annamalai Vs Jayakumar: ’நான் லுங்கிதான் கட்டுறன்! உன்னை போல் நைட்டி போடல!’ அண்ணாமலையை விளாசிய ஜெயக்குமார்
Annamalai Vs Jayakumar: ’நான் லுங்கிதான் கட்டுறன்! உன்னை போல் நைட்டி போடல!’ அண்ணாமலையை விளாசிய ஜெயக்குமார்

சென்னை எழும்பூரில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோனின் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

டி.ஜெயக்குமார் பேட்டி

பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வீரன் அழகு முத்துக்கோன் அவர்கள் இந்திய திருநாடு விடுதலை பெறக்கோரி வெள்ளையர்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர், வெள்ளையர்களுக்கு வரி கொடுக்கமாட்டேன் என்று சொல்லி, வெள்ளயனுக்கு அடிபணியாமல் வாழ்ந்த வீரன். வெள்ளைக்கார ஏகாதிபத்திய ஆதிக்க சக்திகள் அவரை சிறைப்பிடித்து, துன்புறுத்தியது. ஆனால் அவர் யாரையும் காட்டிக் கொடுக்க மறுத்துவிட்டார். 

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.