தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Vk Sasikala: தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம்! போலீசார் மீது விமர்சனம் - சசிகலா பேட்டி

VK Sasikala: தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம்! போலீசார் மீது விமர்சனம் - சசிகலா பேட்டி

Jul 03, 2024 08:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jul 03, 2024 08:45 PM IST
  • சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் வி.கே. சசிகலா. அப்போது அவர், "எல்லோருமே அம்மாவை ரொம்பவும் விமர்சனம் செய்தார்கள். ஒரு பெண் முதலமைச்சர் என்பது தான் அதற்கு காரணம். ஆனால் இப்போ அம்மாவின் போட்டோ ஏராளமனோருக்கு தேவைப்படுகிறது. மக்களுக்கும் அம்மாவுக்கு உள்ள தொடர்பு தெரிந்துதான் இதை செய்கிறார்கள். அதிமுக தொண்டர்கள் மனநிலை நன்றாக உள்ளது. எல்லோருக்கும் நான் வரவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. கள்ளக்குறிச்சியில் விவகாரத்தில் இதுவரை 65 பேர் இறந்துள்ளனர். அம்மா இருந்தபோது இது நடந்ததா? காவல்துறை அவரது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். மக்கள் பிரச்னை என்றால் அவர் தூங்குவது கூட கிடையாது. காவல்துறையை இயக்குபவர்கள் சரியாக இல்லை என்பது தான் எனது குற்றச்சாட்டு. நான்காவது ஆண்டில் இருக்கும் இந்த அரசாங்கம் ரேஷன் கடையில் சரிவர பொருள்கள் கொடுப்பதில்லை" என்று அவர் கூறினார்.
More