தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update: 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Weather Update: 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

Aarthi V HT Tamil
May 17, 2023 01:19 PM IST

தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ட்ரெண்டிங் செய்திகள்

மே 18 முதல் மே 21 வரை:  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை

17.05.2023 & 18.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

18.05.2023 முதல் 21.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

17.05.2023: மத்திய வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப் படுகிறார்கள்.

சமீபத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் மோக்கா புயல் உருவானது. இந்த புயல் வங்க தேசம் மற்றும் மியான்மர் இடையே அதி தீவிர சூறாவளி புயலாக கரையை கடந்தது. இந்த புயலானது காற்றில் இருக்கும் ஈரப்பதம் இழுத்து சென்றுள்ளதால் வறண்ட காற்று நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கத்திரி வெயிலின் போது இயல்பைவிட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இப்படியான சூழலில் நேற்று தமிழ்நாட்டில் சுமார் 20 மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவானது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 42.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 2017 ஆம் ஆண்டிற்கு பின் சென்னையில் 42 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்