தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Fact Check: புகழ்பெற்ற குற்றால அருவியில் மலைப்பாம்புகள் மீனுக்காக சண்டையிட்டதா..-உண்மை என்ன?

Fact Check: புகழ்பெற்ற குற்றால அருவியில் மலைப்பாம்புகள் மீனுக்காக சண்டையிட்டதா..-உண்மை என்ன?

News checker HT Tamil
Jul 01, 2024 05:49 PM IST

Courtallam: குற்றால அருவியில் மலைப்பாம்புகள் மீனுக்காக சண்டையிட்டதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தது நியூஸ் செக்கர் தமிழ் டீம்.

Fact Check: புகழ்பெற்ற குற்றால அருவியில் மலைப்பாம்புகள் மீனுக்காக சண்டையிட்டதா..-உண்மை என்ன?
Fact Check: புகழ்பெற்ற குற்றால அருவியில் மலைப்பாம்புகள் மீனுக்காக சண்டையிட்டதா..-உண்மை என்ன?

Fact: வைரலாகும் வீடியோ குற்றாலத்தில் எடுக்கப்பட்டதல்ல என வனத்துறை தெரிவித்துள்ளது.

“குற்றாலத்தில் கூட்டம் குறைவாக உள்ள நிலையில், ஐந்தருவியில் கொட்டும் நீரில் அடித்து வரப்பட்ட மீன்களை மலைப்பாம்புகள் பிடித்து இரையாக்குவதும், ஒரு மீனுக்காக இரண்டு பாம்புகள் சண்டையிடுவதும் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. அருவியில் குளிக்கச் செல்லும் பொதுமக்கள் கவனமாக இருக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

உண்மை சரிபார்ப்பு

குற்றால அருவியில் மலைப்பாம்புகள் மீனுக்காக சண்டையிட்டதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தது நியூஸ் செக்கர் தமிழ் டீம்.

அதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டில் கேரள மாநிலம் அதிரப்பள்ளி அருவியில் எடுக்கப்பட்டதாக கூறி இவ்வீடியோ யூடியூப் பக்கம் ஒன்றில் பதிவிடப்பட்டிருந்ததை அந்தக் குழுவால் காண முடிந்தது.

தொடர்ந்து அந்தக் குழு தேடுகையில் பாகிஸ்தானில் எடுக்கப்பட்டதாக கூறி இதே வீடியோ 2020 ஜூலையில் மற்றொரு யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

இதனையடுத்து இவ்வீடியோ குற்றாலத்தில் எடுக்கப்பட்டதல்ல என வனத்துறை விளக்கமளித்துள்ளதாக தமிழ்நாடு தகவல் சரிப்பார்ப்பகம் அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு வழியாக தெரிவித்துள்ளதை காண முடிந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோ பல இடங்களில் எடுக்கப்பட்டதாக கூறி கடந்த சில வருடங்களாகவே சமூக ஊடகங்களில் பரவி வருவதை காண முடிகின்றது. இவ்வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்பதை நியூஸ் செக்கர் தமிழ் குழுவால் கண்டறிய முடியவில்லை. ஆனால் இது குற்றாலத்தில் எடுக்கப்பட்டதல்ல என வனத்துறையின் விளக்கம் மூலமாக அறிய முடிகின்றது.

குற்றாலம் அருவி

குற்றாலம் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் சராசரியாக 160 மீ (520 அடி) உயரத்தில் அமைந்துள்ள ஒரு பஞ்சாயத்து நகரமாகும். சித்தார் ஆற்றில் உள்ள குற்றாலம் நீர்வீழ்ச்சி ஒரு முக்கிய சுற்றுலா தலமாகும்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றாலம் அகஸ்தியமலைத் தொடரின் ஒரு பகுதியாகும், அப்பகுதியில் வாழ்ந்ததாகக் கருதப்படும் அகஸ்திய முனிவரின் பெயரைக் கொண்ட மலையாகும். குற்றாலத்திற்கு அருகில் உள்ள நகரம் 5 கிமீ (3.1 மைல்) தொலைவில் உள்ள தென்காசி ஆகும். அருகிலுள்ள விமான நிலையங்கள் தூத்துக்குடி விமான நிலையம் (91 கிமீ தொலைவில்) மற்றும் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் (122 கிமீ தொலைவில்) உள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் 5 கிமீ (3.1 மைல்) தொலைவில் உள்ள தென்காசியில் உள்ளது. குற்றாலம் தமிழகத்தின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்று ஆகும்.

பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்தி முதலில் Newschecker இல் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

WhatsApp channel

டாபிக்ஸ்