தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Maharaja: ‘அந்த நாய் என் கதைய திருடிடுச்சு.. சமூகத்துல வாழத்தெரியாதவன் அவன்’ - கதை திருட்டு சர்ச்சையில் மகாராஜா!

Maharaja: ‘அந்த நாய் என் கதைய திருடிடுச்சு.. சமூகத்துல வாழத்தெரியாதவன் அவன்’ - கதை திருட்டு சர்ச்சையில் மகாராஜா!

Jun 26, 2024 01:12 PM IST Kalyani Pandiyan S
Jun 26, 2024 01:12 PM , IST

Maharaja: படத்தை பார்த்த போது, அது முழுக்க முழுக்க என்னுடைய கதை என்பது அப்பட்டமாக தெரிந்தது. இந்தக்கதையை நான் பதிவு செய்து வைத்த காரணத்தால், நான் சங்க தலைவர்களான பாக்யராஜ் மற்றும் பாரதிராஜாவிடம் இது குறித்து கேட்டு, மனு அளித்தேன். - கொதிக்கும் தயாரிப்பாளர்

Maharaja: ‘அந்த நாய் என் கதைய திருடிடுச்சு.. சமூகத்துல வாழத்தெரியாதவன் அவன்’ - கதை திருட்டு சர்ச்சையில் மகாராஜா!

(1 / 6)

மகாராஜா திரைப்படத்தின் கதை திருட்டுக்கதை என்று தயாரிப்பாளர் ஒருவர் குற்றம் சாட்டி இருக்கிறார். திருட்டுக்கதை அவர் பேசும் போது, “மகாராஜா திரைப்படம் தற்போது திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த படத்தின் கதை என்னுடைய கதையில் இருந்து திருடப்பட்டது. 2020 ம் ஆண்டே, இந்தக்கதை என்னிடம் வந்து பேசப்பட்ட கதை. உடனே நான் நித்திலனை, இந்தப்படத்தை குறும்படமாக எடுத்து வரச்சொன்னேன். அதற்கான பணத்தையும் கொடுத்தேன். அவரும் எடுத்து வந்தார். படம் சிறப்பாக இருந்தது. அதன் பின்னர் அதனை படமாக்குவதற்கான வேலைகளை செய்து கொண்டிருந்தேன்.   

(2 / 6)

இதற்கிடையே, என்னுடைய படமான அத்தியாயம் 1 படத்தை எடுப்பதற்கான வேலைகளை ஒருபக்கம் செய்து கொண்டிருந்தேன். அதற்கான நடிகர்களுக்கான கால்சீட்களை வாங்கி வைத்திருந்தேன். ஆனால், குறுக்கே மழை வந்து விட்டது. அதனால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டேன். பின்னர் மீண்டும் படப்பிடிப்பை தொடங்குவதற்கான வேலைகளில் இறங்கினேன். ஷூட்டிங் தொடங்குவதற்கு 2 நாட்கள் முன்னதாக, என்னுடைய படக்குழுவினர், என்னிடம் வந்து, உங்களது கதை, மகாராஜா என்ற பெயரில் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறினர்.  

(3 / 6)

தடுக்க ஒரு கூட்டமே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதையடுத்து நான் படத்தை பார்க்கச் சென்றேன். படத்தை பார்த்த போது, அது முழுக்க முழுக்க என்னுடைய கதை என்பது அப்பட்டமாக தெரிந்தது. இந்தக்கதையை நான் பதிவு செய்து வைத்த காரணத்தால், நான் சங்க தலைவர்களான பாக்யராஜ் மற்றும் பாரதிராஜாவிடம் இது குறித்து கேட்டு, மனு அளித்தேன். ஆனால், என்னை போன்ற தயாரிப்பாளர்கள் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக அங்கு ஒரு கூட்டமே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நடிகர் விஷால் உள்ளிட்ட சில நண்பர்கள் சிறு தயாரிப்பாளர்களை வளரவிடுங்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அப்படியான வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. வேறு சிலரே வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக்கதையினுடைய அம்சத்தை வைத்து பார்க்கும் போது, விஜய்சேதுபதி நன்றாக நடித்திருந்தார். தயாரிப்பாளரும் படத்தை நன்றாக தயாரித்திருந்தார். ஆனால் இயக்குநர் என்ற அந்த நாய் கதையை திருடிவிட்டது. அதற்கு ஆதாரம் உள்ளது.   

(4 / 6)

நான் தான் பெயர் வைக்க வேண்டும்.நான் பெற்ற பிள்ளைக்கு நான் தான் பெயர் வைக்க வேண்டும். சமூகத்தில் வாழ்த்தெரியாதவன் என் கதையை திருடிவிட்டான். ஒரு மனிதனை மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டும் என்பதற்காக கூட இதனை செய்து விட்டார்கள். 

(5 / 6)

இது என்னுடைய இரண்டாவது படமாக செய்ய இருந்தேன். படத்தின் கதையை சொன்ன போது, என்னை ஆசீர்வாதம் செய்தது நடிகர் ந்சார்லி. விரும்பி நடிக்க வந்தவர் கே.எஸ்.ரவிக்குமார். இந்தப்படத்தின் கதை சென்னையின் திரையரங்க உரிமையாளர் ஸ்ரீதர் மூலம் சென்று இருக்கிறது என்பது என்னுடைய நம்பிக்கை.” என்று பேசினார்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்