Redpix Felix Gerald: ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு இன்றோடு முடியும் நீதிமன்றக் காவல்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Redpix Felix Gerald: ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு இன்றோடு முடியும் நீதிமன்றக் காவல்!

Redpix Felix Gerald: ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு இன்றோடு முடியும் நீதிமன்றக் காவல்!

Divya Sekar HT Tamil
May 31, 2024 08:11 AM IST

Redpix Felix Gerald : ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸ் ஜெரால்டை 31 ஆம் வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.அதன்படி இன்றுடன் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நீதிமன்றக் காவல் முடிவடைகிறது.

ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு இன்றோடு முடியும் நீதிமன்றக் காவல்!
ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் நிறுவனர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு இன்றோடு முடியும் நீதிமன்றக் காவல்!

இந்த விவகாரத்தில் சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியார் மீது திருச்சி மற்றும் கோவை சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் வீடுகளில் சோதனை

இந்த வழக்கு தொடர்பாக சவுக்கு சங்கரின் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் ஏற்கெனவே போலீசார் சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்து இருந்தனர்.

இதனை தொடர்ந்து ரெட்பிக்ஸ் பெலிஸ் ஜெரால்டு வசிக்கும் நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள வீடு மற்றும் ரெட்பிக்ஸ் நிறுவனம் இயங்கி வரும் அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்ட திருச்சி போலிசார் எலட்ரானிக் உபகரணங்கள் மற்றும் சில ஆவணங்களை எடுத்து என்றனர்.

பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நீதிமன்றக் காவல் 

இந்த நிலையில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்டுக்கு திருச்சி நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. கோவை சைபர் கிரைம் காவல்துறையினரும் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் பெலிக்ஸ் ஜெரால்ட்டை காவலில் எடுத்து விசாரிக்க 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் மே 23ஆம் தேதி ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார். 

இன்றோடு முடியும் நீதிமன்றக் காவல்

இந்நிலையில் மே 24 ஆம் தேதி மாலையுடன் விசாரணை முடிந்த பிறகு அவரை போலிசார் மீண்டும் நீதிமன்றத்தில் பெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் 31 ஆம் வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார். அதன்படி இன்றுடன் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நீதிமன்றக் காவல்  முடிவடைகிறது.

ரெட்பிக்ஸ் நிறுவனம் மன்னிப்பு

இந்த நிலையில் பெண் காவலர்கள் குறித்த சவுக்கு சங்கரின் நேர்காணலை எடுத்தற்காக ரெட்பிக்ஸ் யூடியூப் சேனல் மன்னிப்பு கேட்டு இருந்தது.

இந்த நிலையில் ரெட்பிக்ஸ் செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கோட்டகச்சேரி கிராமத்தில் கடந்த வாரம் சோதனை மேற்கொண்டனர். அங்கு உள்ள அவரது விவசாய நிலத்தை ஒட்டிய கட்டப்பட்டு உள்ள கண்டெய்னர் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். 

ரெட்பிக்ஸ் நிறுவனத்தின் விளக்கமும் மன்னிப்பும்!

இது தொடர்பாக கடந்த மே 15ஆம் தேதி ரெட்பிக்ஸ் நிறுவனத்தின் பொதுமேலாலர் ஜென் பெலிக்ஸ் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சில் RED PIX-க்கு உடன்பாடு இல்லை, அது RED PIX-ன் கருத்தும் இல்லை. இருப்பினும் அந்த காணொளியால் காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் வருத்தம் அடைந்துருப்பதால் RED PIX நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பெண்களின் மான்பை மதிக்கிறோம்

கடந்த 30-04-2024 அன்று Why Savukku Media is Targeted? என்ற தலைப்பில் நமது RED PIX ஊடகத்தின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு, சவுக்கு சங்கரை நேர்காணல் செய்தார். அந்த நேர்காணலில் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து சவுக்கு சங்கரின் கருத்துதானே தவிர RED PIX ஊடகத்தின் கருத்து அல்ல. 

பெண்களின் மாண்பையும், சுயமரியாதையையும் மிக உயர்வாக RED PIX ஊடகம் கருதுகிறது. சவுக்கு சங்கர் பேசிய அந்த சர்ச்சைக்குரிய கருத்து காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என அந்நிறுவனம் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.