Fact Check: நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் போதையில் தள்ளாடி விழுந்தாரா.. வைரல் புகைப்படம் உண்மையா?-fact check did ntk party man idumbhavanam karthik fall under intoxication - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Fact Check: நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் போதையில் தள்ளாடி விழுந்தாரா.. வைரல் புகைப்படம் உண்மையா?

Fact Check: நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் போதையில் தள்ளாடி விழுந்தாரா.. வைரல் புகைப்படம் உண்மையா?

Newschecker HT Tamil
Aug 14, 2024 11:15 AM IST

“கோவில் திருவிழா ஒன்றில் போதையில் தள்ளாடியபடி தரையில் விழுந்த நாய் டம்ளர் இடும்பாவனம் கார்த்தி” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

Fact Check: நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் போதையில் தள்ளாடி விழுந்தாரா.. வைரல் புகைப்படம் உண்மையா?
Fact Check: நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் போதையில் தள்ளாடி விழுந்தாரா.. வைரல் புகைப்படம் உண்மையா?

உண்மை: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் படத்திலிருப்பவர் சின்னத்திரை நடிகர் ஸ்ரீ ஆவார். படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளை எடுத்து இத்தகவல் பரப்பப்படுகின்றது.

“கோவில் திருவிழா ஒன்றில் போதையில் தள்ளாடியபடி தரையில் விழுந்த நாய் டம்ளர் இடும்பாவனம் கார்த்தி” என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

வைரலாகி வரும் புகைப்படம்

நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் போதையில் தள்ளாடி தரையில் விழுந்ததாக பரவும் படம்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்து களத்தில் இறங்கியது.

இது உண்மையா?

நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் போதையில் தள்ளாடி தரையில் விழுந்ததாக பரவும் புகைப்படத்தை கூர்மையாக பார்க்கையில் அப்படத்தில் இருப்பவர் இடும்பாவனம் கார்த்திக் அல்ல, சின்னத்திரை நடிகர் ஸ்ரீ என அறிய முடிந்தது.

தொடர்ந்து வைரலாகும் படங்கள் குறித்து தேடுகையில் “Watch Video : நல்லா மிதி.. வாங்குன காசுக்கு கொஞ்சமாவது நியாயமா நடிக்கணும்… வைரலாகும் ஸ்ரீயின் BTS வீடியோ” என்று தலைப்பிட்டு ஏபிபி நாடு வெளியிட்ட செய்தியில் வைரலாகும் படங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதை காண முடிந்தது.

அச்செய்தியில் தொலைக்காட்சி தொடர் ஒன்றின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ஸ்ரீ நடித்த காட்சி என்று அப்படங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தேடுகையில் நடிகர் ஸ்ரீயின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இதுக்குறித்த வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.

நாதக நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் போதையில் தள்ளாடி தரையில் விழுந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானதாகும். உண்மையில் வைரலாகும் படத்திலிருப்பவர் சின்னத்திரை நடிகர் ஸ்ரீ ஆவார். அவர் நடிக்கும் தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளை எடுத்து இத்தகவல் பரப்பப்படுகின்றது.

இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

பொறுப்புத் துறப்பு

இந்தச் செய்தி முதலில் newschecker-இல் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

ஸ்ரீகுமார் கணேஷ் தொலைக்காட்சி நடிகர் ஆவார். ஆனந்தம் (2003–2009), அகல்யா (2004–2006), மலர்கள் (2005–2007), பந்தம் (2006–2009), இதயம் (2009–2012) மற்றும் பொம்மலாட்டம் (2012–2012–) போன்ற தொடர்களில் பல்வேறு வேடங்களில் நடித்து பிரபலமானவர். 2016) சன் டிவியில். சிவசக்தி (2008–2009), நாணல் (2008–2009), உறவுகள் (2009-2012), பிள்ளை நிலா (2012–2014), தலையணைப் பூக்கள் (2016–2018), தேவதையை கண்டேன் (2017–2018) ஆகிய படங்களில் அவர் முக்கிய வேடங்களில் குறிப்பிடத்தக்கவர். யாரடி நீ மோகினி (2018–2021) நாடகத்திலும் நடித்து புகழ்பெற்றவர். இவர் பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

ஷங்கர்-கணேஷ் ஜோடியின் ஒரு பகுதியாக அறியப்பட்ட பிரபல இசையமைப்பாளர் கணேஷின் மகன் ஸ்ரீ. இவரது தாயார் 1950களின் பிற்பகுதியில் இருந்து 1960களில் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரான ஜி.என்.வேலுமணியின் மகள். கோலிவுட் நடிகர் விஜய் மற்றும் தொலைக்காட்சி நடிகர்களான சஞ்சீவ் மற்றும் தீபக் தினகர் ஆகியோரின் நெருங்கிய நண்பர் ஸ்ரீ. ஸ்ரீகுமார் மற்றும் அவருடன் நடித்த ஷமிதா 2009 இல் திருமணம் செய்து கொண்டனர். மேலும் அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.