TamilNadu Exit poll: தமிழ்நாட்டில் தட்டித்தூக்கும் திமுக! பூஜ்ஜியம் ஆகும் அதிமுக! வெளியான கருத்து கணிப்பு!
Exit poll 2024: TV9 Bhratavarsh – Polstart அமைப்பின் கருத்து கணிப்பின்படி, இந்தியா கூட்டணி 35 இடங்கள் வரை வெல்லும் என்று தெரிவித்து உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 4 இடங்களை வரை பெறும் எனவும், எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக ஒரு இடங்களை கூட பெறாது என்றும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 30க்கும் மேற்பட்ட இடங்களை வெல்லும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்து உள்ளன.
தமிழ்நாட்டில் கூட்டணி நிலவரம்
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆளும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன.
அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சி அங்கம் வகித்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், ஓபிஎஸின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், ஜான் பாண்டியனின் தமிழ்நாடு முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்தன.
தமிழ்நாட்டின் கருத்து கணிப்பு முடிவுகள்
ஆக்ஸிஸ் மை இந்தியா அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில் திமுக 22 முதல் 20 இடங்களை வெல்லும் என தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 6 முதல் 8 இடங்களும், அதிமுகவுக்கு 21 இடங்களும் கிடைக்கலாம் என தெரிவித்து உள்ளது. அதே போல் பாஜகவுக்கு ஒன்று முதல் 3 இடங்கள் வரை கிடக்கலாம் என தெரிவித்து உள்ளது.
TV9 Bharatavarsh – Polstart அமைப்பின் கருத்து கணிப்பின்படி, இந்தியா கூட்டணி 35 இடங்கள் வரை வெல்லும் என்று தெரிவித்து உள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 4 இடங்களை வரை பெறும் எனவும், எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக ஒரு இடங்களை கூட பெறாது என்றும் தெரிவித்துள்ளது.
News 18 நிறுவனத்தின் கருத்து கணிப்பின்படி திமுக கூட்டணி 36 முதல் 39 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாக கூறி உள்ளது. பாஜகவுக்கு 1 முதல் 3 இடங்களும், அதிமுகவுக்கு பூஜ்ஜியம் முதல் இரண்டு இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் அந்த அமைப்பு கூறி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் 2024
இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடந்து முடிந்தது.
இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் கடந்த மே 7ஆம் தேதியும், மே 13ஆம் தேதி அன்று நான்காம் கட்ட தேர்தலும் நடந்து முடிந்தது.
வரும் மே 20ஆம் தேதி அன்று 5ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவும், மே 25ஆம் தேதி அன்று 6ஆம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்ற முடிந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதியான இன்று இறுதி கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்து உள்ளது. வரும் ஜூன் 4ஆம் தேதி அன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
டாபிக்ஸ்