Modi Meditation: கன்னியாகுமரியில் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு திமுக எதிர்ப்பு! போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Modi Meditation: கன்னியாகுமரியில் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு திமுக எதிர்ப்பு! போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை!

Modi Meditation: கன்னியாகுமரியில் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு திமுக எதிர்ப்பு! போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை!

Kathiravan V HT Tamil
May 29, 2024 05:34 PM IST

பிரதமர் நரேந்திர மோடியின் தியான நிகழ்ச்சி என்பது தேர்தல் பரப்புரை யுக்தி என்பதால் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், கட்சித் தலைமையின் அனுமதி உடன் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரியில் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு திமுக எதிர்ப்பு! போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை!
கன்னியாகுமரியில் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு திமுக எதிர்ப்பு! போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை!

7ஆம் கட்ட தேர்தலும் மோடியின் தியானமும் 

நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடந்து உள்ள நிலையில் வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி அன்று கிழக்கு, மேற்கு, இந்தியாவில் உள்ள 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 30ஆம் தேதி மாலை உடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவடைய உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில், மே 30ஆம் தேதி முதல் 24 மணி நேர தியானத்தில் ஈடுபட உள்ளார்.

இது அரசியல் நிகழ்வு அல்ல

தேர்தல் பிரசாரத்தின் இறுதிக்கட்ட முடிவுக்கு பிறகு கன்னியாகுமரிக்கு அவர் செல்வது ஆன்மிக பயணமாக இருக்கும் என்பதால் அரசியல் நிகழ்வுகள் எதுவும் நடைபெறாது.

திருவள்ளுவர் சிலை அருகே அமைந்து உள்ள விவேகாந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில்தான் சுவாமி விவேகானதர் தியானம் செய்து உள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, உத்ராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் காவி உடை அணிந்து பிரதமர் நரேந்திர மோடி தியானம் மேற்கொண்டார்.

பிரதமரின் திட்டம் என்ன?

தேர்தல் பரப்புரை நிறைவடையும் மே 30 ஆம் தேதி மாலையில் தியானத்தை தொடங்கும் மோடி ஜூன் 1 ஆம் தேதி தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வரும் வரை தமிழ்நாட்டில் இருப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழ்நாட்டுக்கு அரசு முறையாகவும், தேர்தல் பரப்புரைக்காகவும் பிரதமர் மோடி ஏழுக்கும் மேற்பட்ட முறை தமிழ்நாடு வந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மோடியின் தியான நிகழ்வுக்கு திமுக எதிர்ப்பு 

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தியான நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடியின் தியான நிகழ்ச்சி என்பது தேர்தல் பரப்புரை யுக்தி என்பதால் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், கட்சித் தலைமையின் அனுமதி உடன் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ஏற்கெனவே காங்கிரஸ் எதிர்ப்பு

பிரதமர் மோடியின் தியான நிகழ்வுக்கு ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் ட்வீட் செய்து இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, 

”மே 30 முதல் ஜூன் 1 வரை திரு.நரேந்திர மோடி அவர்கள் கன்னியாகுமரியில் தியானம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளி வருகிறது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இதுபோன்ற நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது.

வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர அமைதிக் காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் ஊடகங்கள் வாயிலாக திரு.மோடி அவர்கள் மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் நாளை கடிதம் கொடுக்கப்பட உள்ளது. தேவைப்பட்டால் மாண்புமிகு நீதிமன்றத்தையும் அணுகுவோம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.” என கூறி உள்ளார்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.