Annamalai: ’மோடி மீண்டும் பிரதமர் ஆவது சின்ன குழந்தைக்கு கூட தெரியும்!’ அண்ணாமலை ஆவேசம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Annamalai: ’மோடி மீண்டும் பிரதமர் ஆவது சின்ன குழந்தைக்கு கூட தெரியும்!’ அண்ணாமலை ஆவேசம்!

Annamalai: ’மோடி மீண்டும் பிரதமர் ஆவது சின்ன குழந்தைக்கு கூட தெரியும்!’ அண்ணாமலை ஆவேசம்!

Kathiravan V HT Tamil
Feb 27, 2024 04:08 PM IST

”இன்னும் 60 நாட்களில் ஐயா நரேந்திர மோடி அவர்கள் 400 இடங்களை தாண்டி மீண்டும் பிரதமர் ஆவார். தமிழ்நாட்டில் இருந்து 39 எம்.பிக்கள் வெற்றி பெறுவார்கள்”

பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டுள்ள திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேச்சு
பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டுள்ள திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேச்சு

தமிழகத்தில் அரசியல் சரித்திரத்தில் நாம் அமர்ந்துள்ளோம். இத்தனை ஆண்டுகளாக எதற்காக காத்திருந்தோமோ அது நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் 60 நாட்களில் ஐயா நரேந்திர மோடி அவர்கள் 400 இடங்களை தாண்டி மீண்டும் பிரதமர் ஆவார். தமிழ்நாட்டில் இருந்து 39 எம்.பிக்கள் வெற்றி பெறுவார்கள்.

வரும் 60 நாட்களில் கண் துஞ்சாமல் உழைத்து தமிழ்நாட்டில் இருந்து 39 எம்.பிக்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கும் வரை நமக்கு ஓய்வு இல்லை. பத்தாண்டுகளுக்கு பிறகு நாம் திரும்பி பார்க்கும்போது, தமிழ்நாட்டில் மாற்றம் பல்லடத்தில் நடந்தது என சொல்ல வேண்டும். பிரதமர் மோடியின் புகழ் பட்டித்தொட்டி எல்லாம் உள்ளது. 

மஞ்சளுக்காக் சந்தையை ஏற்படுத்தி, வாரியத்தை பிரதமர் உருவாக்கி உள்ளார். நீலகிரியில் உள்ள தொடா பழங்குடியினருக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கி உள்ளது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் உள்ளது என்றால் அதற்கு காரணம் பிரதமர் மோடி அவர்கள்தான், அதற்காகத்தான் ஜல்லிக்கட்டு காளை அவருக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 

நம்முடைய ஆட்சியின் சாட்சியாக, எல்லோரும் மோடி, மோடி என சொல்ல தொடங்கிவிட்டார்கள். மக்கள் பொய் பரப்புரைக்களுக்கு காது கொடுக்க மாட்டார்கள். மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவார் என்பது சின்ன குழந்தைக்கு கூட தெரியும். 

அர்ப்பணிப்போடு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்காக பாடுபட வேண்டும். நமக்கு அன்பும், ஆதரவும் தந்த தமிழ்நாடு மக்களுக்கு நன்றி கூறி கொள்கிறேன். 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.