தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Edappadi Palaniswami Made The First Announcement After Taking Charge As Aiadmk General Secretary

AIADMK: பொதுச்செயலாளரான உடன் EPS வெளியிட்ட முதல் அறிவிப்பு!

Kathiravan V HT Tamil
Mar 28, 2023 12:04 PM IST

கழக உடன்பிறப்புகள், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து, ஒரு உறுப்பினருக்கு ரூ. 10/- வீதம் தலைமைக் கழகத்தில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகள் மத்தியில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். பொதுச்செயலாளர் வெற்றி சான்றிதழை தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கழகப்பொதுச்செயலாளராக என்னை தேர்வு செய்ததற்காக அதிமுகவின் அனைத்து தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நன்றி என்றார்.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் முதல் அறிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். 

அதில் அனைத்தியதிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஐயது ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களுடைய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும் என்ற கழக சட்ட திட்ட விதிமுறைப்படி, கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையிலும், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள் வருகின்ற 5.4.2023 – புதன் கிழமை முதல் தலைமைக் கழகத்தில் விநியோகிக்கப்படும்.

கழக உடன்பிறப்புகள், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து, ஒரு உறுப்பினருக்கு ரூ. 10/- வீதம் தலைமைக் கழகத்தில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

1972ஆம் ஆண்டில் அதிமுக தொடங்கப்பட்ட நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர்களாக எம்ஜிஆர், நாவலர் நெடுஞ்செழியன், ப.உ.சண்முகம், ராகவானந்தம், ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்