Annamalai vs EPS: ’எடப்பாடி பழனிசாமி ஒரு நம்பிக்கை துரோகி!’ ஆத்திரத்தில் கொந்தளித்த அண்ணாமலை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Annamalai Vs Eps: ’எடப்பாடி பழனிசாமி ஒரு நம்பிக்கை துரோகி!’ ஆத்திரத்தில் கொந்தளித்த அண்ணாமலை!

Annamalai vs EPS: ’எடப்பாடி பழனிசாமி ஒரு நம்பிக்கை துரோகி!’ ஆத்திரத்தில் கொந்தளித்த அண்ணாமலை!

Kathiravan V HT Tamil
Jul 05, 2024 04:26 PM IST

Annamalai vs EPS: இந்த கட்சியை எப்படி வழிநடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுரை சொல்ல வேண்டாம். ஈபிஎஸ் அவர்கள் கண்ணாடியை பார்த்தால், அதிமுக பொதுச்செயலாளராக எப்படி செயல்பட வேண்டும் என்று கண்ணாடி அறிவுரை சொல்லும் என அண்ணாமலை விமர்சனம்

Annamalai vs EPS: ’எடப்பாடி பழனிசாமி ஒரு நம்பிக்கை துரோகி!’ ஆத்திரத்தில் கொந்தளித்த அண்ணாமலை!
Annamalai vs EPS: ’எடப்பாடி பழனிசாமி ஒரு நம்பிக்கை துரோகி!’ ஆத்திரத்தில் கொந்தளித்த அண்ணாமலை!

பச்சை பொய் சொல்வதை நிறுத்துங்கள்  

விக்கிரவாண்டி தொகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பீகார், கர்நாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடைபெறுகின்றது. ஆனால் தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல், மத்திய அரசின் மீது பழிபோடுகின்றனர். மாநில அரசுக்கு அதிகாரம் உள்ள நிலையில், பச்சை பொய் சொல்வதை முதலமைச்சர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.  நரேந்திர மோடி அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு முழு ஆதரவு கொடுத்து உள்ளார். 

ஈபிஎஸ்க்கு அண்ணாமலை பதில் 

அண்ணாமலை போன்றவர்களால் மத்திய அரசுக்கு தரம் தாழ்ந்துவிட்டது என ஈபிஎஸ் சொல்லி உள்ளாரே, என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், கண் முன்னால் அதிமுக என்ற அற்புதமான கட்சியை சில தலைவர்கள் தங்கள் சுய லாபத்திற்காக அழித்துக் கொண்டு இருக்கின்றனர். உடன் இருப்பவர்களை ஊடகங்களை பேச வைத்து அதிமுகவை காப்பாற்றி விடலாம் என எடப்பாடி பழனிசாமி கனவு காண்கிறார். அவரது சுயநல அரசியலால் அதிமுக அழிந்து கொண்டு இருக்கின்றது. அதிமுக தொண்டர்கள் பாஜகவை நோக்கி படை எடுக்க தொடங்கிவிட்டார்கள். 

ஈபிஎஸ் ஒரு நம்பிக்கை துரோகி 

நம்பிக்கை துரோகி என்ற பெயர் ஒருவருக்கு பொருந்தும் என்றால் அது எடப்பாடி பழனிசாமிதான். பிரதமர் அவர்கள் டெல்லியில் அருகில் அமர வைப்பார். ஆனால் பாஜக வேண்டாம் என்று சொல்லி ஒதுங்கியவர் எடப்பாடி பழனிசாமி. அதனால் மக்கள் அவருக்கு பல இடங்களில் டெபாசிட் இழக்க வைத்தனர். 

 அதிமுக கட்சி நன்றாக இருந்தாலும், தலைவர்கள் சரியாக இல்லை என்பதால் 2024 தேர்தலில் மக்கள் தண்டனை கொடுத்து உள்ளனர். 

எடப்பாடி பழனிசாமி சிந்தித்து பேச வேண்டும் 

எடப்பாடி பழனிசாமி அவர்கள் பாராளுமன்றத் தேர்தலில் 134 வாக்குறுதிகளை கொடுத்து உள்ளார். அதை எப்போது நிறைவேற்றுவார். எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு முன்னர் சிந்தித்து பேச வேண்டும். 

கோவையில் 13 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக வாங்கி அதிமுக டெபாசிட் வாங்கி உள்ளது. ஆனால் கோவை விமான நிலையத்தில் வீரவசனம் பேசி வருகின்றனர். 

கோவை உங்கள் கோட்டைதானே, 10க்கு 9 எம்.எல்.ஏ நீங்கள்தானே உள்ளீர்கள். ஆனால் உங்களை விட 2 மடங்கு ஓட்டுகளை நாங்கள் வாங்கி உள்ளோம். 

ஈபிஎஸ்க்கு கண்ணாடி அறிவுரை சொல்லும்!

இந்த கட்சியை எப்படி வழிநடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுரை சொல்ல வேண்டாம்.  ஈபிஎஸ் அவர்கள் கண்ணாடியை பார்த்தால், அதிமுக பொதுச்செயலாளராக எப்படி செயல்பட வேண்டும் என்று கண்ணாடி அறிவுரை சொல்லும். 

எங்கள் கட்சி அகில இந்திய அளவில் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்து உள்ளோம். ஆனால் அதிமுக தொடர்ந்து தோல்வி அடைந்து வருகின்றது. 

2026 சட்டமன்றத் தேர்தலையும் ஈபிஎஸ் புறக்கணிப்பாரா?

ஈரோடு இடைத் தேர்தலின்போது, இது என்னுடைய சொந்த ஊர், என்னுடைய கோட்டை, ஒன்றரை லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று என்னிடம் ஈபிஎஸ் போனில் சொன்னார். அவருக்காக ஓபிஎஸ் ஒதுங்கி நின்றார். ஆனால் ஆயிரம் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈபிஎஸ் தோற்றார். 

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரி இல்லாத காரணத்தால், விக்கிரவாண்டி இடைத் தேர்தலை புறக்கணிப்பதாக ஈபிஎஸ் பொய் சொல்கின்றார். ஆனால் இதே தேர்தல் ஆணையம்தான் 2026 தேர்தலை நடத்த உள்ளது. அதையும் அவர் புறக்கணிக்க போகின்றாரா?. 

தமிழக மக்களுக்கு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக ஈபிஎஸ் செயல்படவில்லை. என் கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்று அவர் அறிவுரை சொல்கிறார். நான் அவர் கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்று அறிவுரை சொல்கின்றேன். உங்களுக்கு அடிமையாக இருப்பதற்காக பாஜக இல்லை. பிரதமர் நரேந்திர மோடியை புற முதுகில் குத்தியவர் அவர் என அண்ணாமலை கூறினார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Twitter: https://twitter.com/httamilnews 

இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.