PMK: ’கடவுள் நேரில் வந்து வரம் தந்தால் என்ன கேட்பேன் தெரியுமா?’ மேடையை கலங்க செய்த மருத்துவர் ராமதாஸ்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Pmk: ’கடவுள் நேரில் வந்து வரம் தந்தால் என்ன கேட்பேன் தெரியுமா?’ மேடையை கலங்க செய்த மருத்துவர் ராமதாஸ்!

PMK: ’கடவுள் நேரில் வந்து வரம் தந்தால் என்ன கேட்பேன் தெரியுமா?’ மேடையை கலங்க செய்த மருத்துவர் ராமதாஸ்!

Kathiravan V HT Tamil
Dec 15, 2024 05:20 PM IST

மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் என்னிடம் வந்து என்ன வரம் என்று கேட்டால், ஒரு சொட்டு மது இல்லாத தமிழ்நாடு, ஒரு சொட்டு நீர் கடலுக்கு போகாத தமிழ்நாடு, எங்கும் கஞ்சா விற்காத தமிழ்நாடு வேண்டும் என்று கேட்பேன். தற்போது தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை நீக்கமற நிறைந்து உள்ள

PMK: ’கடவுள் நேரில் வந்து வரம் தந்தால் என்ன கேட்பேன் தெரியுமா?’ மேடையை கலங்க செய்த மருத்துவர் ராமதாஸ்!
PMK: ’கடவுள் நேரில் வந்து வரம் தந்தால் என்ன கேட்பேன் தெரியுமா?’ மேடையை கலங்க செய்த மருத்துவர் ராமதாஸ்!

பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய ’போர்கள் ஓய்வதில்லை’ என்ற தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. 

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், வேந்தருமான முனைவர் கோ. விசுவநாதன் பங்கேற்று நூலின் முதல் படியை வெளியிட, விஜிபி குழும நிறுவனங்களின் தலைவர் முனைவர் வி.ஜி.சந்தோசம் பெற்றுக் கொண்டார். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், ஜாதி என்று சொல்லி தமிழ்நாட்டு மக்கள் என்னை குறுகிய வட்டத்தில் சேர்த்துவிட்டார்கள். வன்னியர்கள் வாழும் ஊர் வழியாக பிணத்தை நான் எடுத்து சென்றேன். அது ஜாதியா?, தமிழ்நாட்டில் இரட்டை குவளை முறையை ஒழித்தது ஜாதியா? என கேள்வி எழுப்பினார். நல்ல கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகியவை நமக்கு தேவை. 

மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் என்னிடம் வந்து என்ன வரம் என்று கேட்டால், ஒரு சொட்டு மது இல்லாத தமிழ்நாடு, ஒரு சொட்டு நீர் கடலுக்கு போகாத தமிழ்நாடு, எங்கும் கஞ்சா விற்காத தமிழ்நாடு வேண்டும் என்று கேட்பேன். தற்போது தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை நீக்கமற நிறைந்து உள்ளது. 

ஒரே நாடு ஒரே தேர்தலை மத்திய அரசு கொண்டு வருகிறது அதே போல், ஓட்டுக்கு காசு இல்லாத தேர்தலை கொண்டு வர வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வேண்டும். நான் அரசியல்வாதி, என் தொழில் போராடுவது, அதனால் நான் போராடிக் கொண்டே இருப்பேன் என கூறி உள்ளார். 

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.