தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Dmdk Treasurer Premalatha Vijayakanth Interviewed About Aiadmk-bjp Alliance Conflict

ஒரே கூட்டணியில் ஒருவரை ஒருவர் திட்டுவதா? அதிமுக-பாஜகவுக்கு பிரேமலதா அறிவுரை

Kathiravan V HT Tamil
Mar 17, 2023 11:23 AM IST

”தமிழ்த் தேர்வுக்கு 50 ஆயிரம் பேர் ஆப்செண்ட் ஆனது ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கும் அவமானம்”

ஈரோடு கிழக்கில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை
ஈரோடு கிழக்கில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை

ட்ரெண்டிங் செய்திகள்

கேள்வி:- ஈரோடு கிழக்கு தொகுதியில் நின்று இருக்க வேண்டாம் என நினைக்கிறீர்களா?

ஈரோடு கிழக்கில் போட்டியிட பயந்து எத்தனையோ கட்சிகள் ஒதுங்கி இருந்தபோது தைரியமாக நாங்கள் களத்தில் இறங்கி நேர்மையான முறையில் மக்களை சந்தித்தோம்.

கேள்வி:- நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன?

தேர்தல் தேதி வர இன்னும் ஓராண்டு உள்ளது. தேமுதிகவை பொறுத்தவரை ஆட்சியாளர்கள் நல்லது செய்தால் அதனை வரவேற்கும் முதல் கட்சி நாங்கள்தான். ஆட்சியை சரியாக செய்யவில்லை என்றால் அதனை தட்டிக்கேட்கும் முதல் கட்சியும் தேமுதிகதான்.

கேள்வி:-12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 50ஆயிரம் பேர் எழுதாமல் உள்ளார்களே?

தமிழ்த் தேர்வுக்கு 50 ஆயிரம் பேர் ஆப்செண்ட் ஆனது ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கும் அவமானமாக நான் கருதுகிறேன்.தமிழ்நாடு அரசும், துறைசார் அமைச்சரும் ஆய்வு செய்து உண்மையை சொல்ல வேண்டும். மேடை மேடைக்கு தமிழ் தமிழ் என்று பேரும் நிலையில் எங்கே சென்று கொண்டிருக்கிறது தமிழ்நாடு.

கேள்வி:- முன்பு திமுக கூட்டணியில் தேமுதிக இருந்தால் ஆளுங்கட்சியாக தேமுதிக இருந்திருக்கும் என விமர்சனம் வந்துள்ளந்தே?

இக்கரைக்கு அக்கரை பச்சைதான். கேப்டன் அன்று எடுத்த முடிவு மூன்றாவதாக ஒரு மாற்றம் வேண்டும் என்பதுதான். மக்கள் அதனை ஆதரித்து இருந்தால் இந்த கேள்விக்கே இடமிருந்து இருக்காது.

கேள்வி:- அதிமுக-பாஜக உரசலை எப்படி பார்க்கிறீர்கள்?

அதிமுகவிற்குள்ளேயே பலவிரிசல் உள்ளது. நான்காக பிரிந்து இருக்கிறார்கள். முதலில் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்தால்தான் பலத்தை நிரூபிக்க முடியும். பின்னர் பாஜக உடன் கூட்டணியில் உள்ளார்களா இல்லையா என்று முடிவெடுக்க வேண்டியது அதிமுக தலைமை. ஒரே கூட்டணியில் இருந்து ஒருவரை ஒருவர் திட்டிகொள்வது ஆரோக்கியமாக இருக்காது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்