Armstrong Murder: ஆம்ட்ராங் படுகொலைக்கு எதிராக பேரணி நடத்தும் பா.ரஞ்சித்! தலித் அமைப்புகளை ஒருங்கிணைத்து அதிரடி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Armstrong Murder: ஆம்ட்ராங் படுகொலைக்கு எதிராக பேரணி நடத்தும் பா.ரஞ்சித்! தலித் அமைப்புகளை ஒருங்கிணைத்து அதிரடி!

Armstrong Murder: ஆம்ட்ராங் படுகொலைக்கு எதிராக பேரணி நடத்தும் பா.ரஞ்சித்! தலித் அமைப்புகளை ஒருங்கிணைத்து அதிரடி!

Kathiravan V HT Tamil
Jul 17, 2024 06:19 PM IST

Armstrong Murder: சமத்துவத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் என்கிற ஆளுமையை விழ்த்திவிட்டால் அவர்தம் நம்பிய அரசியலும் வீழும் என்கிற சிந்தனை உதிப்பதற்கு முன்பே அதைப் பொய்ப்பிக்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.

Armstrong Murder: ஆம்ட்ராங் படுகொலைக்கு எதிராக பேரணி நடத்தும் பா.ரஞ்சித்! தலித் அமைப்புகளை ஒருங்கிணைத்து அதிரடி!
Armstrong Murder: ஆம்ட்ராங் படுகொலைக்கு எதிராக பேரணி நடத்தும் பா.ரஞ்சித்! தலித் அமைப்புகளை ஒருங்கிணைத்து அதிரடி!

எழும்பூரில் பேரணி அறிவிப்பு 

வரும் ஜூலை 20ஆம் தேதி மாலை 3 மணி அளவில் எழும்பூரில் உள்ள ரமடா ஹோட்டலில் தொடங்கும் பேரணி ராஜரத்தினம் அரங்கம் அருகில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக நீலம் பண்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் கடந்த ஜூலை 5ஆம் தேதியன்று சமூக விரோதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இக்கொடூர நிகழ்வு தனிப்பட்ட முறையில் நம் ஒவ்வொருவருக்கும் பேரிழப்பாகும். 

நெடுந்தூரம் பயணிக்க வேண்டி உள்ளது

தலித்துகள், சமூக அரசியல் மற்றும் பொருளாதார விடுதலை அடைய இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதில் அவர்கள் சந்தித்த இழப்புகள் எண்ணிலடங்கா! இதையெல்லாம் மீறி இயக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும் 'அம்பேத்கரியம்' என்கிற ஒற்றைப்புள்ளியில் இணைந்த தலைவர்களே நம் பலம். நூறு வருடத்திற்கும் மேலான தலித் அரசியல் வரலாற்றில் ஒரு தலைவரின் இரப்பே கேள்விக்குறியாகியிருப்பது சுலபமாகக் கடந்து போககிய நிகழ்வல்ல.

சமூகத்திற்கு நேர்ந்த இழப்பு 

சமத்துவத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் என்கிற ஆளுமையை விழ்த்திவிட்டால் அவர்தம் நம்பிய அரசியலும் வீழும் என்கிற சிந்தனை உதிப்பதற்கு முன்பே அதைப் பொய்ப்பிக்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. பாபாசாகேப் அம்பேத்கரை நெஞ்சிலேந்தி, இவ்விழப்பு ஒரு குடும்பத்திற்கோ, இயக்கத்திற்கோ நேர்ந்ததாகக் கருதாமல் நம் ஒவ்வொருவருக்கும், சமூகத்திற்கும் நேர்ந்த இழப்பு எனப் பறைசாற்றுவோம். சாதி. மதம் மற்றும் இயக்கங்களுக்கு அப்பாற்பட்டு, தான் நம்பிய தத்துவத்தின்படி வாழ்ந்த சமூக வீரர் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் செயற்பாடுகளை நினைவிலேந்தி சென்னை எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகே கூடி, இராஜரத்தினம் அரங்கம் வரை ஊர்வலமாகச் சென்று அங்கு நடைபெறும் நினைவேந்தல் கூட்டத்தில் பெருந்திரளாக அணியமாகி, கட்சிப் பாகுபாடு இல்லாமல் அணிதிரள்வோம். வழக்கு விசாரணை நேர்மையான முறையில் நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகளைத் தண்டித்திடவும், தலித் அரசியல் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் குரல் கொடுப்போம். அனைத்து தலித் கூட்டமைப்பின் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பல்வேறு சங்கங்கள் மற்றும் கலைஞர்கள் கலந்து கொள்ளும் எழுச்சிமுகு பேரணியில் ஆயிரமாயிரமாய் இணைவோம், வாருங்கள் ” என குறிப்பிப்டப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள இயக்குநர் பா.ரஞ்சித், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் கே.ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலைக்கு நீதி வேண்டி வரும் சனிக்கிழமை 20 ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் சென்னை எழும்பூரில் நினைவேந்தல் பேரணி. அனைத்து தலித் கூட்டமைப்பின் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்வேறு சங்கங்கள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொள்ளும் எழுச்சிமிகு பேரணியில் ஆயிரமாயிரமாய் அணிதிரள்வோம், வாருங்கள். ஜெய் பீம்!” என பதிவிட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கொலை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே வெளியில் நின்று கொண்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கை, உணவு டெலிவரி ஊழியர்கள் போர்வையில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிவிட்டு தப்பி சென்றது.

அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி சென்னை வர உள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.