தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Cyber Crime News Brothers Threatens Women And Got 2 Lakhs Rupees From Gpay

‘மார்பிங்‘ புகைப்பட மிரட்டல் - பெண்ணிடம் ஜிபேயில் ரூ.2 லட்சம் பறித்த சகோதரர்கள்

Priyadarshini R HT Tamil
Feb 06, 2023 11:46 AM IST

Crime News: சமூக வலைதளங்களில் நடிகர்கள் பெயரில் போலி கணக்குகள் துவங்கி பெண்களை மிரட்டி பணம் பறித்த அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக வலைதளங்களில் நடிகர்கள் பெயரில் போலி கணக்கு துவங்கி பெண்ணிடம் மிரட்டி பணம் பறித்து கைது செய்யப்பட்ட சகோதரர்கள்.
சமூக வலைதளங்களில் நடிகர்கள் பெயரில் போலி கணக்கு துவங்கி பெண்ணிடம் மிரட்டி பணம் பறித்து கைது செய்யப்பட்ட சகோதரர்கள்.

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனால் அந்தப்பெண் பணம் தர மறுத்துவிட்டார். உடனே அந்த பெண்ணின் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூகவலைதளத்தில் பகிரப்போவதாக மிரட்டி உள்ளனர், இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் ரூ.2 லட்சத்தை ஜிபே மூலமாக அனுப்பியுள்ளார். ஆனால் அவர்கள் விடாமல் அந்த பெண்ணிடம் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். இதனால் அந்த பெண் ஆன்லைன் மூலமாக காஞ்சீபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். 

புகாரின்பேரில், வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய எஸ்பி எம்.சுதாகர் உத்தரவிட்டார். சைபர் கிரைம் ஏஎஸ்பி பாலகுமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பிகளான அலாவுதீன் (27) மற்றம் வாகித் (25) ஆகியோர் கூட்டாக இந்த குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஈரோடு சென்று அவர்கள் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் மடிக்கணினியை பறிமுதல் செய்தனர். 

நடிகர்களின் புகைப்படங்களை வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அவர்களது பெயரிலேயே போலியான கணக்குகளை உருவாக்கியுள்ளனர். அதன்மூலம் போலியான நட்பை ஏற்படுத்தி தங்களது வலையில் சிக்கவைத்து பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்று அவற்றை ஆபாசமாக மார்பிங் செய்து பெண்களின் நட்பு வட்டாரங்களுக்கும், உறவினர்களுக்கும் மற்றும் சமூக வலைதளத்திலும் பகிர்வதாக மிரட்டி பணத்தை பெற்றுள்ளனர். பெண்கள் மற்றும் மாணவிகள் சமூகவலைதள பக்கங்களின் பிரபலங்களின் பெயர்களிலோ மற்றும் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்தோ வரும் அழைப்புகளையோ, நட்பு அழைப்புகளையோ ஏற்க வேண்டாம். சமூக வலை தளங்களை பயன்படுத்தும் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று  சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்