தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Controversy On Social Media Due To Director Vetermaran's Speech On Caste Certificate

”Boomer Uncle வெற்றிமாறன்” விளாசும் நெட்டிசன்கள்! சாதி சர்ச்சையில் நடந்தது என்ன?

HT Tamil Desk HT Tamil
Feb 04, 2023 12:12 PM IST

Director vetrimaran about caste certificate: வெற்றி மாறனின் முழு பேச்சை கவனிக்காமல் அவரை ”BoomerUncle” என சமூகவலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்

இயக்குநர் வெற்றிமாறன்
இயக்குநர் வெற்றிமாறன்

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற தமிழ் கனவு, தமிழ் மரபும் மற்றும் பண்பாட்டு பரப்புரை எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், முதல் தலைமுறை சினிமா என்ற தலைப்பில் தான் சினிமா துறைக்கு வந்தது எப்படி என்று பேசினார்.

தாய் மொழியில் சிந்தியுங்கள்

அனைவரின் தாய் மொழியும் அவர்களுக்கு அடிப்படையானதாகவும் சிந்தனை மொழியாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு சினிமாவால் நேரடியாக சமூகமாற்றத்தை ஏற்படுத்துமா என்றால் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு, ஆனால் சினிமா வெளிப்படுத்தும் கருத்துகள் விவாதத்தை ஏற்படுத்தினால் மாற்றம் வர வாய்ப்புள்ளது.

’’சினிமா பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது’’

சினிமா என்பது பெரிய மாற்றத்தை உண்டு செய்வதற்கான ஊடகம் அல்ல, இங்கு எல்லோரும் சம்பளத்திற்காகத்தான் வேலை செய்கிறோம். ஆயிரம் மேடைகளில் பேசுவதை விட ஒரு சினிமா ஹீரோ பேசுவது வேகமாக போய் மக்களை சேர்கிறது. அடிப்படைவாத சமூகமாக மாறுவதற்கும் சினிமாவை பயன்படுத்தி கொள்ள முடியும் என்றார்.

அவரது பேச்சின் நிறைவாக பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் வெற்றிமாறன் பதிலளித்தார், ரஞ்சித் என்பவர் “நீங்கள் எடுக்கும் படத்திலும், அரசிலும் அனைத்து சாதிகளும் சமம் என்று சொல்கிறார்கள், ஆனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கண்டிப்பாக சாதியை குறிப்பிட சொல்கிறார்கள் இது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்” என கேள்வி எழுப்பினார்

”சாதி சான்றிதழ் வேண்டாம்”

இதற்கு பதிலளித்த இயக்குநர் வெற்றிமாறன், இது எனக்கே பெரிய கொடுமையான விஷயம், என் பசங்களுக்கு NO caste சான்றிதழ் வாங்க முயற்சித்தேன். ஆனால் அப்படி தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். நீதிமன்றத்திலும் அப்படி தர முடியாது சாதியை போட்டே ஆக வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்.

முடிந்தவரை சாதி சான்றிதழை தராமல் இருக்க வேண்டும் என்பதை முயற்சிக்கிறேன். பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் சாதிச்சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் யாருக்கு தேவை இல்லையோ அவர்களிடம் அதனை கேட்க வேண்டாம், எனக்கு தேவை இல்லை என நான் நினைக்கிறேன், ஆனால் அவர்களுக்கான உரிமையை வாங்க வேண்டிய இடத்தில் சாதிச்சான்றிதழை கொடுத்துதான் ஆகவேண்டும்.

”சாதி சான்றதழ் வேண்டும்”

சமூகநீதிக்காக சில இடங்களில் சாதியை குறிப்பிட்டுதான் ஆக வேண்டும், நான் சாதியை வேண்டாம் என்று சொல்கிறேன், தில் இருந்து விடுவதற்கான உரிமை வாய்ப்பு எனக்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சமூகநீதிக்கு கட்டாயம் சாதி சான்று தேவைப்படுகிறது. எல்லோரு உடனடியாக சாதி சான்றிதழை தூக்கிப்போட்டுவிட முடியாது என தெரிவித்தார்.

வெற்றிமாறன் பேசிய முழு பேச்சில் உள்ள கருத்துகள் கவனிக்கப்படாமல் பள்ளி, கல்லூரிகளில் சாதி சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும் என்று பேசியதை மட்டும் வைத்து சமூகவலைத்தளங்கில் விவாதங்கள் நடந்து வருகிறது.

வெற்றிமாறனை பூமர் அங்கிள் என்று நெட்டிசன்கள் சிலர் கிண்டல் செய்து வருகின்றனர்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்