Coimbatore :ஹைட்ரஜனில் இயங்கும் yali 2.o- அசத்தல் முயற்சியில் கோவை மாணவர்கள்!
yali 2.o: ஹைட்ரஜன் மூலம் இயங்கும் yali 2.o படகை தயாரித்த கல்லூரி மாணவர்கள் கொண்ட இந்த அணிக்கு டீம் ஸீ சக்தி என்று பெயரிடப்பட்டுள்ளது.

கோவை தனியார் கல்லூரி மாணவர்கள் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் yali 2.o படகை வடிவமைத்துள்ளனர். சர்வதேச அளவில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில் இந்தியாவில் இருந்து இந்த கல்லூரி அணி மட்டுமே பங்கேற்கின்றது.
கோவையில் உள்ள தனியார் கல்லூரி (KCT) மாணவர்கள் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் yali 2.o படகை வடிவமைத்துள்ளனர். இதன் அறிமுக விழா கல்லூரி வளாகத்தில் இன்று மாலை நடைபெற்றது. கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் கோவை மண்டல நேவி (navy) கமாண்டெண்ட் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஹைட்ரஜன் மூலம் இயங்கும் yali 2.o படகை தயாரித்த கல்லூரி மாணவர்கள் கொண்ட இந்த அணிக்கு டீம் ஸீ சக்தி என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் மொனாக்கோ எனர்ஜி(MEBC) அமைப்பு கடல்சார் துறையில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மற்றும் நிலைத்தன்மையை வலியுறுத்தும் படகுகளை உருவாக்க மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக சர்வதேச அளவில் போட்டிகளை நடத்தி வருகின்றது. இந்த சர்வதேச அளவிலான படகு வடிவமைப்பு போட்டிகளில் கனடா, இத்தாலி, துபாய், இந்தோனேசியா, நெதர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, கிரீஸ் உட்பட்ட 11 நாடுகளை சேர்ந்த 17 அணிகள் பங்கேற்கின்றது. இதில் இந்தியாவில் இருந்து கோவை தனியார் கல்லூரி (KCT) அணி மட்டுமே பங்கேற்கின்றது.
