தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Coimbatore: கார் மோதியதால் வாக்குவாதம்- கத்தியை காட்டி மிரட்டினாரா ஓட்டுநர்?

Coimbatore: கார் மோதியதால் வாக்குவாதம்- கத்தியை காட்டி மிரட்டினாரா ஓட்டுநர்?

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 09, 2023 12:18 PM IST

கார் சேதமானதை சரி செய்ய கால் டாக்ஸி ஓட்டுனர் 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்துள்ளார்.

மிரட்டிய ஓட்டுநர்
மிரட்டிய ஓட்டுநர்

ட்ரெண்டிங் செய்திகள்

கோவை-திருச்சி சாலையில் உள்ள இராமநாதபுரம் மேம்பாலத்தில்காலை நேரத்தில் பெண் ஒருவர் தனது காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த வாடகை டாக்சி அந்த பெண் வந்த கார் மீது மோதியது. 

இதனால் ஆத்திரம் அடைந்த பெண் உடனடியாக காரை நிறுத்தி விட்டு, வாடகை டாக்சி டிரைவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அப்போது அந்த கால் டாக்ஸி டிரைவர் கத்தியை எடுப்பது போல பாவனை செய்து அந்த பெண்ணை மிரட்டியதால் பதற்றம் ஏற்பட்டது. இதனால் அச்சம் அடைந்த அந்த பெண் எதற்காக கத்தியை காட்டி மிரட்ட பார்க்கிறாயா என்று கேட்டபடி அந்த சம்பவத்தை செல்போனில் பதிவு செய்தார். இதை வீடியோவாக பதிவு செய்த அந்த பெண் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதைதொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இரு தரப்பினரும் சமாதானமாக போவதாக தெரிவித்ததால், பெண்ணின் கார் சேதமானதை சரி செய்ய கால் டாக்ஸி ஓட்டுனர் 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொடுத்துள்ளார். இதனால் காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்