டெல்லி புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் முதல் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி வரை - டாப் 10 நியூஸ்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  டெல்லி புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் முதல் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி வரை - டாப் 10 நியூஸ்

டெல்லி புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் முதல் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி வரை - டாப் 10 நியூஸ்

Karthikeyan S HT Tamil
Sep 26, 2024 07:38 PM IST

Tamil Top 10 News: டெல்லி புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி, போலி சித்த மருத்துவர் கைது உள்பட இன்றைய டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

டெல்லி புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் முதல் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி வரை - டாப் 10 நியூஸ்
டெல்லி புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் முதல் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி வரை - டாப் 10 நியூஸ்

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மெட்ரோ 2ம் கட்ட பணிகளுக்கான தொகை, சமக்ரா சிக்‌ஷா திட்ட நிலுவை நிதியை உடனே விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைக்க உள்ளார் முதலமைச்சர்.

5 பேரின் சடலங்கள் ஒப்படைப்பு

புதுக்கோட்டை அருகே கடன் பிரச்னையால் காரின் உள்ளே தற்கொலை செய்துகொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் சடலங்களும், பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கேரள சுற்றுலாப் பயணிகளுக்கு காய்ச்சல் சோதனை

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கன்னியாகுமரி வரும் கேரள சுற்றுலாப் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மாணவிகளுக்கு தனி ஓய்வறை

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் மாணவிகளுக்கென தனி ஓய்வறை அமைப்பதற்கு ரூ.8.55 கோடியை 3 வாரங்களில் ஒதுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் முறையாக பராமரிக்கப்படாதது குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

போலி சித்த மருத்துவர் கைது

உதகை பகுதியில் பிளஸ் 2 மட்டுமே படித்துவிட்டு 25 ஆண்டுகளாக சித்த மருத்துவராக சிகிச்சை அளித்து வந்த இஸ்மாயில் (50) என்பவர் கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டத்தில் போலி சித்த மருத்துவர்கள் குறித்து அரசுக்கு வந்த புகாரை அடுத்து கடந்த சில நாட்களாக மருத்துவத்துறை அதிகாரிகள் சித்த மருத்துவமனை, கிளினிக்குகளில் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 4 போலி சித்த மருத்துவர்கள், மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயர்நீதிமன்ற கிளை கேள்வி

இந்து சமய அறநிலையத்துறை கோயில்களை முறையாக பராமரிப்பது இல்லை எனவும் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். வேலையை மட்டும் செய்கிறது என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் குருக்கள் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரிய வழக்கில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கெளரி அமர்வு கருத்து. கோயில் அனுமதிக்கப்பட்ட குருக்கள், அலுவலகர்கள், பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஆண்டு வருமானம் எவ்வளவு? செலவின விபரங்கள் என்ன? ஆகியவற்றை அறிக்கையாக தாக்கல் செய்ய கோயில் செயல் அலுவலருக்கு உத்தரவு

அரசுப்பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து

கடலூரில் உள்ள சமட்டிகுப்பம் என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பண்ருட்டியில் இருந்து புலியூர் காட்டுச்சாகை கிராமத்திற்கு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சர் கடிதம்

பஹ்ரைன் கடலோரக் காவல் படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 28 மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி

பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி செல்வகுமார், செல்போனை காவல்துறையிடம் சமர்ப்பிக்கவும், தனது செயலுக்கு சமூக வலைதளத்தில் வருத்தம் தெரிவிக்கவும் அவர் முன்ஜாமின் கோரிய மனு மீது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. அந்த ட்வீட்டை நீக்கவும் உத்தரவிட்டு முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதுபோல நடந்துகொண்டால், சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற உத்தரவிட நேரிடும் எனவும் நீதிபதி பரத சக்ரவர்த்தி எச்சரிக்கை

சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில் பாலாஜி!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, இன்று உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருந்த நிலையில், அவர் 471 நாள்களுக்குப் பிறகு புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.