தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Thevar Jayanthi: தேவர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

Thevar Jayanthi: தேவர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

Pandeeswari Gurusamy HT Tamil
Oct 30, 2023 10:25 AM IST

Thevar Jayanthi: தேவர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை செலுத்தினார்.

தங்க கவசம் சாத்தப்பட்ட தேவர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை
தங்க கவசம் சாத்தப்பட்ட தேவர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை

ட்ரெண்டிங் செய்திகள்

பசும்பொன் முத்துராம லிங்க தேவரின் 116 ஆவது பிறந்தநாள் இன்று. முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் திங்களன்று (இன்று) நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் பசும்பொன் கிராமத்திற்கு நேரில் சென்று தங்க கவசம் அணிக்கப்பட்ட தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், உள்ளிட்ட பல அமைச்சர்கள் உடனிருந்தனர்.

முன்னதாக முத்துராம லிங்க தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிறன்று மதுரைக்கு வருகை தந்தார்.

இந்நிலையில் முதல் நிகழ்வாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உருவ சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் மதுரை ஆவின் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.190.40 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுகிறது. மதுரை - தொண்டி சாலையில் அப்போலோ சந்திப்பில் ரூ.150.28 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமையவுள்ளது. இதற்கான கட்டுமான பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடரந்து தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர்களின் உருவச் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை அடுத்து திருபுவனம் மானாமதுரை பார்த்திபனூர் வழியில் சாலை மார்க்கமாக பசும்பொன் கிராமத்திற்கு சென்று அங்குள்ள தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளார்.

தமிழகம் முதல்வருடன் அமைச்சர்கள் பி.மூர்த்தி பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதல்வரை தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் ராமநாதபுரத்திற்கு வருகை தர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்