Tamil Puthalvan Scheme: இனி மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரெடி! தமிழ் புதல்வன் திட்டத்தை முதலமைச்சர்தொடங்கி வைத்தார்!-chief minister mk stalin launched the tamil puthalvan scheme in coimbatore - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamil Puthalvan Scheme: இனி மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரெடி! தமிழ் புதல்வன் திட்டத்தை முதலமைச்சர்தொடங்கி வைத்தார்!

Tamil Puthalvan Scheme: இனி மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரெடி! தமிழ் புதல்வன் திட்டத்தை முதலமைச்சர்தொடங்கி வைத்தார்!

Kathiravan V HT Tamil
Aug 09, 2024 01:42 PM IST

Tamil Puthalvan Scheme: இத்திட்டத்தின் வாயிலாக, அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும்பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுக் கல்லூரிகளில் சேரும் ஏறத்தாழ 3 இலட்சத்து 28 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000/- பெற்றுப் பயன் அடைவார்கள்.

Tamil Putulavan Scheme: இனி மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரெடி! தமிழ் புதல்வன் திட்டத்தை முதலமைச்சர்தொடங்கி வைத்தார்!
Tamil Putulavan Scheme: இனி மாணவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரெடி! தமிழ் புதல்வன் திட்டத்தை முதலமைச்சர்தொடங்கி வைத்தார்!

மனதிற்கு நெருக்கமான திட்டம் 

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”வரலாற்றில் ஒரு சில திட்டங்கள்தான் நமது மனதிற்கு நெருக்கமான திட்டங்களாக இருக்கும். அப்படிப்பட்ட திட்டமாக தமிழ் புதல்வன் திட்டம் உருவாகி உள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைக்க நான் கோவை மண்டலத்தை தேர்வு செய்து உள்ளேன். இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களை உள்ள பகுதியாக உள்ளது. தமிழ்நாடுதான் இந்தியாவுக்கு முன்னோடி மாநிலம் என்று சொல்லும் அளவுக்கு நல்ல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்” என முதலமைச்சர் கூறினார். 

3.28 லட்சம் மாணவர்கள் பலன் அடைவார்கள் 

இத்திட்டத்தின் வாயிலாக, அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும்பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுக் கல்லூரிகளில் சேரும் ஏறத்தாழ 3 இலட்சத்து 28 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000/- பெற்றுப் பயன் அடைவார்கள்.

360 கோடி ரூபாய் ஒதுக்கீடு 

இந்த திட்டத்திற்காக 360 கோடி ரூபாயை இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்து உள்ளது. பொருளாதார வசதிக் குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் பள்ளிப் படிப்பிற்குப் பின் உயர் கல்வியைத் தொடர முடியாத நிலையில் இருந்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர உதவுகிறது.

சாதனை படைத்த தமிழ்நாடு 

தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் வாயிலாக ஆண்டுதோறும் சராசரியாக 7,72,000 மாணவர்கள் மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்கிறார்கள். இவர்களில் கல்லூரிகளில் சேர்ந்து பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை இந்திய அளவில் தமிழ்நாட்டில் மிக அதிகமாகும். உயர்கல்வி சேர்க்கையில் இந்தியா முதலிடம் என்னும் மிகப் பெரிய சாதனையைத் தமிழ்நாடு படைத்துள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. 

புதுமை பெண் திட்டம் 

பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து தொடர்ந்து படிக்கவேண்டும் என்பதற்காக, 6ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000/- வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை சென்னை அரசு பாரதியார் மகளிர் கல்லூரியில் 5.9.2022 அன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் வழக்கமாகக் கல்லூரிகளில் சேரும் மாணவிகளைவிடக் கடந்த ஆண்டில் கூடுதலாகக் கல்லூரிகளில் சேர்ந்து மகளிர் பயன் பெறுகின்றனர். புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் நிதியாண்டில் 2,09,365 மாணவியர்கள் பயனடைந்து வந்த நிலையில், 2023-2024-ஆம் நிதியாண்டில் சுமார் 64,231 மாணவிகள் கூடுதலாக இணைந்து 2,73,596 மாணவியர்கள் பயனடைந்துள்ளதாக தமிழ்நாடு அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை சுமார் 3,28,280 மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ், 2022-2023-ஆம் நிதியாண்டில் ரூ.100.11 கோடியும், 2023-2024-ஆம் நிதியாண்டில் ரூ.271.66 கோடியும் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1,000/- ரூபாய் வீதம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. 

புதுமைப் பெண் திட்டத்திற்கென 2024-2025-ஆம் நிதியாண்டிற்கு ரூ.370.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2024 முதல் ஜுலை-2024 வரை ரூ.95.61 கோடி செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.