Ponmudy: பொன்முடி கவனித்து வந்த உயர்கல்வித்துறை ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு
உயர்கல்வித்துறையை அமைச்சர் ராஜகண்ணப்படுக்கு கூடுதல் பொறுப்பாக முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கி உள்ளார்.
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தண்டனை பெற்றுள்ள நிலையில் அவர் தனது பதவியை இழந்துள்ளார். இதனால் அவர் கவனித்து வந்த உயர்கல்வித்துறையை அமைச்சர் ராஜகண்ணப்படுக்கு கூடுதல் பொறுப்பாக முதல்வர் ஸ்டாலின் ஒதுக்கி உள்ளார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி பொன்முடி ஆகிய இருவருக்கும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பொன்முடி சட்டமன்ற உறுப்பினர் பதவியில் தகுதி இழந்ததோடு, அமைச்சர் பதவியையும் இழந்துள்ளார்.
இந்நிலையில் பொன்முடி கவனித்து வந்த உயர்கல்வி துறை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சரான ராஜ கண்ணப்பனுக்கு கூடுதலாக பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஏற்கனவே அமைச்சர் ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையை கவனித்து வரும் நிலையில் கூடுதலாக அமைச்சர் பொன்முடி கவனித்து வந்த உயர்கல்வி துறையையும் ராஜ கண்ணப்பன் கவனிப்பார் என்று முதல்வர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் அவர் கவனித்து வந்த மின்சாரத் துறையை நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சரான தங்கம் தென்னரசு விடும் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. இதேபோல் செந்தில் பாலாஜி வசம் இருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் இலாகா ஏற்கனவே வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த முத்துச்சாமிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9