தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update: ’கோடையை குளிர்விக்க உருவாகிறது குறைந்த காற்றழ்த்த தாழ்வு மண்டலம்’ வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Weather Update: ’கோடையை குளிர்விக்க உருவாகிறது குறைந்த காற்றழ்த்த தாழ்வு மண்டலம்’ வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Kathiravan V HT Tamil
May 02, 2023 01:17 PM IST

மே மாதம் 6ஆம் தேதியையொட்டி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகிறது - வானிலை ஆய்வு மையம்

மழை - வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்
மழை - வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

ட்ரெண்டிங் செய்திகள்

தென்னிந்தியாவை ஒட்டிய கடற்பகுதிகளில் கிழக்கில் இருந்து மேற்கு திசையில் நகரும் ராஸ்பி ரேஸ் நகர்கிறது. மேற்கில் இருந்து கிழக்கு திசைக்கு எம்ஜேஓ நிகழ்வும் நிகழ்கிறது.

காற்றில் ஈரப்பதம் அளவு கூடி உள்ள நிலையில் நிலப்பகுதிகளில் ஈரப்பதத்தின் குவிவு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துள்ளது. 60 இடங்களில் கனமழையும், 13 இடங்களில் மிக கனமழையும் பதிவாகி உள்ளது.

அதிகபட்சமாக கடலூர் வானமாதேவியில் 19 செ.மீ மழையும் சேலம் சங்ககிரி துருகத்தில் 17 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

அடுத்து வரும் 2 நாட்களுக்கு தமிழ்நாட்டு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், நீலகிரி முதல் தேனி வரையிலான மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், மதுரை உள்ளிட்ட உள்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகரில் அடுத்து வரும் இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரை பகுதிகளில் சூரைக்காற்றானது 40 முதல் 45 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அடுத்து வரும் இரு தினங்களுக்கு மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம்.

மேலும் வரும் மே மாதம் 6ஆம் தேதியையொட்டி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி மே 7 அல்லது 8 தேதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக கூடும்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்